Home Featured இந்தியா 2015-ல் பட்டங்களை வாரிக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக சம்பியன் விருது!

2015-ல் பட்டங்களை வாரிக் குவித்த சானியா-ஹிங்கிஸ் ஜோடிக்கு உலக சம்பியன் விருது!

897
0
SHARE
Ad

Sania-Mirzaலண்டன் – 2015-ம் ஆண்டில், உலகம் முழுவதும் இருக்கும் டென்னிஸ் ரசிகர்களை, திரும்பிப் பார்க்க வைத்த ஜோடி, இந்தியாவின் சானியா மிர்சாவும், சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசும் தான். இந்த ஆண்டில் மட்டும் இந்த ஜோடி 9 முறை சாம்பியன் பட்டம் வென்றது.

விம்பிள்டன், அமெரிக்க ஓபன் என இந்த ஜோடி அனைத்திலும் முத்திரைப் பதித்தது. இந்நிலையில், இந்த ஜோடியை, மகளிர் இரட்டையர் பிரிவிற்கான உலக சாம்பியனாக அனைத்துலக டென்னிஸ் கூட்டமைப்பு (ITF) தேர்வு செய்துள்ளது.

இந்த விருது பெறுவது குறித்து சானியா வெளியிட்டுள்ள அறிக்கையில், “மகளிர் இரட்டையர் பிரிவிற்கான உலக சாம்பியனாக அனைத்துலக டென்னிஸ் கூட்டமைப்பு எங்களை அறிவித்திருப்பதை மிகப் பெரும் கௌரவமாகக் கருதுகிறேன். இந்த வருடம் எனக்கும், மார்டினாவிற்கும் சிறந்த வருடமாக அமைந்துள்ளது. எனது இந்த வெற்றி, இந்தியப் பெண்களுக்கு மிகப் பெரிய உந்து சக்தியாக இருக்கும் என நான் நம்புகிறேன்” என்று அவர் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

ஆண்கள் ஒற்றையர் பிரிவு உலக சாம்பியனாக செர்பியாவின் நோவக் ஜோகோவிச்சும், பெண்கள் ஒற்றையர் பிரிவு உலக சாம்பியனாக செரீனா வில்லியம்சும் தேர்வாகி உள்ளது குறிப்பிடத்தக்கது.