Home Slider ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள் – மோடியிடம் ஜெயா கோரிக்கை! 

ஜல்லிக்கட்டை நடத்த அவசரச் சட்டம் கொண்டு வாருங்கள் – மோடியிடம் ஜெயா கோரிக்கை! 

706
0
SHARE
Ad

jayaசென்னை – பொங்கல் தினத்தன்று நடத்தப்படும் வீர விளையாட்டான ஜல்லிக்கட்டை, கடந்த ஆண்டு மே மாதம் உச்ச நீதிமன்றம் தடை செய்தது. தமிழரின் பாரம்பரிய விளையாட்டு, தடை செய்யப்பட்டதைத் தொடர்ந்து பல்வேறு அரசியல் கட்சித் தலைவர்களும், அமைப்பினரும் போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் ஜல்லிக்கட்டை நடத்த, தற்போதைய நாடாளுமன்ற கூட்டத் தொடரிலேயே அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும் என பிரதமர் மோடிக்கு, முதல்வர் ஜெயலலிதா கடிதம் ஒன்றை எழுதி உள்ளார்.

அந்த கடித்தத்தில் ஜெயலலிதா, “தமிழக மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு, விலங்குகள் வதை தடை சட்டத்தில், திருத்தம் கொண்டு வர வேண்டும். எதிர்க்கட்சிகளின் அமளி காரணமாக கூட்டத் தொடரில் ஜல்லிக்கட்டு குறித்த மசோதா நிறைவேற்ற முடியாத நிலை ஏற்பட்டுள்ளதால், நடப்பு கூட்டத் தொடரை நீட்டிக்க வேண்டும் அல்லது சிறப்பு கூட்டத் தொடர் நடத்த வேண்டும்” என்று அவர் அந்த கடித்தத்தில் குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர், “ஜல்லிக்கட்டு நடத்த ஏதுவாக மத்திய அரசு, உடனடியாக அவசரச் சட்டம் கொண்டு வர வேண்டும்” என்றும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.

#TamilSchoolmychoice

கடந்த மாதம் 26-ம் தேதி தொடங்கிய நாடாளுமன்றக் குளிர்காலக் கூட்டத்தொடர், இன்றுடன் நிறைவடைகிறது. இந்நிலையில் தான், ஜெயலலிதா ஜல்லிக்கட்டு தொடர்பாக பிரதமருக்கு கடிதம் எழுதி உள்ளார்.