Home Featured தமிழ் நாடு விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு – நடக்குமா அரசியல் மாற்றம்?

விஜயகாந்துடன் மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் சந்திப்பு – நடக்குமா அரசியல் மாற்றம்?

797
0
SHARE
Ad

vaiko,vijayakanthசென்னை – தேமுதிக தலைவர் விஜயகாந்தை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி அலுவலகத்தில், மக்கள் நலக்கூட்டணித் தலைவர்கள் வைகோ, திருமாவளவன், ஜி.ராமகிருஷ்ணன், முத்தரசன் ஆகியோர் கடந்த சில மணி நேரங்களுக்கு முன்பு சந்தித்துப் பேச்சுவார்த்தை நடத்தி உள்ளனர்.

மக்கள் நலக்கூட்டணியில், தேமுதிக இணைய வேண்டுமென்று, அந்த சந்திப்பின் போது கூறப்பட்டதாகவும், தங்களுக்கு சாதகமான முடிவினை விஜயகாந்த் எடுப்பார் என்று நம்புவதாகவும், விஜயகாந்துடனான சந்திப்பிற்குப் பிறகு, மதிமுக தலைவர் வைகோ பத்திரிக்கையாளர்களிடம் தெரிவித்துள்ளார்.