Home Featured நாடு எதிர்கட்சி என்றால் எப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

எதிர்கட்சி என்றால் எப்போதும் ஆளுங்கட்சியை எதிர்த்துக் கொண்டிருக்க வேண்டுமா?

771
0
SHARE
Ad

Nik Abduhகோலாலம்பூர் – இஸ்லாமியக் கட்சியான பாஸ், எப்போதும் ஆளுங்கட்சியான அம்னோவை எதிர்த்துக் கொண்டிருக்க முடியாது என்று பாஸ் இளைஞர் பிரிவுத் தலைவர் நிக் முகமட் அப்டு நிக் அப்துல் அசிஸ் தெரிவித்துள்ளார்.

அம்னோ நல்லது செய்யும் பட்சத்தில் அவற்றைப் பாராட்டவும் பாஸ் கட்சி தயங்காது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இரண்டு வாரங்களுக்கு முன் நடைபெற்ற அம்னோ பொதுப்பேரவையில் பிரதமரும், அம்னோ தலைவருமான நஜிப் துன் ரசாக், பாஸ் கட்சியுடனான கூட்டணி பற்றி பேசியதற்கு ஆதரவு அளிக்கும் வகையில் நிக் அப்டு இக்கருத்தைக் கூறியுள்ளார்.

#TamilSchoolmychoice

“அம்னோ நல்லது செய்தால், பாஸ் அதை ஆதரிக்கும். எதிர்கட்சியாக இருந்தாலும், பாஸ் எல்லா நேரங்களிலும் அம்னோவை எதிர்த்துக் கொண்டிருக்காது. அது ஆரோக்கியமான அரசியல் கிடையாது”

“அதே போல் தான் அம்னோவும், ஒருவேளை பாஸ் கட்சியோ அல்லது மற்ற எதிர்கட்சிகளோ நல்லது செய்தால், இதையே தான் அவர்களும் செய்ய வேண்டும். அவர்கள் (எங்களைத்) தனிமைப்படுத்தக் கூடாது. நமக்கு அரசியல் முதிர்ச்சி தேவை” என்று நிக் அப்டு இன்று சினார் ஹரியான் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.