கோத்தா கினபாலு – 13 வயது சிறுமியைப் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியதற்காகவும், அவளை கற்பழித்ததற்காகவும், முன்னாள் காவல்துறைத் துணைக் கண்காணிப்பாளருக்கு, 100 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 15 பிரம்படிகளும் விதித்து நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
முன்னாள் துணைக் கண்காணிப்பாளரான ரோஹைசட் அப்துல் அனி (வயது 56) கடந்த 2012-ம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மே மாதத்தில், 4 முறை அச்சிறுமியிடம் இக்குற்றத்தைப் புரிந்ததாக நீதிமன்றத்தில் இன்று நிரூபிக்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து அமர்வு நீதிமன்ற நீதிபதில் ஐனுல் சாரின் மொகமட், ஒவ்வொரு குற்றத்திற்கும் தலா 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்துத் தீர்ப்பளித்தார்.
கடந்த 2012-ம் ஆண்டு, பிப்ரவரி 1-ம் தேதி டாங் டைனஸ்டி தங்கும் விடுதியில், ரோஹாசிட் முதன் முதலாக அச்சிறுமியிடம் தகாத முறையில் நடந்துள்ளார். அதற்கு அடுத்தநாள் மதியம் 12.30 மணியில் இருந்து 1.30 மணி வரையில் அதே தங்கும்விடுதியில் மற்றொரு அறையில் வைத்து அச்சிறுமியை மீண்டும் கற்பழித்துள்ளார்.
அதன் பின்னர், மே மாதம் 1-ம் தேதியும், 6-ம் தேதியும் அதே தங்கும் விடுதியில், அச்சிறுமியைக் கற்பழித்துள்ளார் என நீதிமன்றத்தில் குற்றம் நிரூபிக்கப்பட்டுள்ளது.