Home Featured தொழில் நுட்பம் லைவ் போடோஸ் வசதியை அங்கீகரித்தது பேஸ்புக்!

லைவ் போடோஸ் வசதியை அங்கீகரித்தது பேஸ்புக்!

681
0
SHARE
Ad

live-upload-2கோலாலம்பூர் – ஐபோன் 6 எஸ் மற்றும் ஐபோன் 6 எஸ் பிளசை ஆப்பிள் அறிமுகப்படுத்திய தருணத்தில், அதன் முக்கிய அம்சங்களில் இளைஞர்களை பெரிய அளவில் ஈர்த்தது, ‘லைவ் போடோஸ்’ (Live Photos) வசதி தான். தொழில்நுட்ப நிறுவனங்கள் திறன்பேசிகள் மூலம் எடுக்கப்படும் புகைப்படங்கள் தெளிவாக இருக்க வேண்டும் என்பதற்காக கேமராவின் திறனை அதிகப்படுத்தி வந்த நிலையில், எடுக்கப்படும் புகைப்படத்தை மூன்று நொடி காணொளியாக்கி பயனர்களுக்கு புது வித அனுபவத்தைக் கொடுத்தது ஆப்பிள்.

உதாரணமாக, குழந்தை ஒன்று தனது பிறந்தநாளில் கேக்கின் மீது எரியும் மெழுகுவர்த்தியை, குதுகலத்துடன் ஊதி அணைப்பதை ஐபோன் 6 எஸ் மூலம் லைவ் புகைப்படமாக எடுத்தால், குழந்தை ஊதி, அந்த வெளிச்சம் அணைவது வரை மூன்று நொடி காணொளியாக எடுக்கலாம். எடுக்கப்பட்ட புகைப்படத்தை தொடும் போது, அந்த மூன்று நொடி காணொளி ஓடும்.

live-wallpaperபரவசமூட்டும் இந்த அனுபவத்தை ஆப்பிள் கொடுத்தது. ஐஒஎஸ் தளத்தில் மட்டும் இருந்து வந்த இந்த வசதியை பேஸ்புக் அங்கீகரித்துள்ளது. இனி லைவ் புகைப்படங்களையும் பேஸ்புக் தளத்தில் பதிவிட முடியும்.

#TamilSchoolmychoice

எனினும், இந்த லைவ் போடோஸ் வசதி, ஐஒஎஸ் தவிர வேறு எந்த தளத்திலும் இன்னும் அறிமுகப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

லைவ் போட்டோசிற்கான காணொளியை கீழே காண்க: