Home Featured கலையுலகம் சினிமா தணிக்கைக் குழுவில் கமல்ஹாசனுக்கு முக்கியப் பொறுப்பு!

சினிமா தணிக்கைக் குழுவில் கமல்ஹாசனுக்கு முக்கியப் பொறுப்பு!

839
0
SHARE
Ad

kamalசென்னை – சினிமாக்களை தணிக்கை செய்யும் தணிக்கைக் குழுவில் நடிகர் கமல்ஹாசனின் பெயர் பரிந்துரையில் இருப்பதாகத் தகவல்கள் வந்துள்ளன. சமீபகாலமாக சினிமா படைப்பாளிகளுக்கும் தணிக்கை குழுவினருக்கு தொடர்ந்து மோதல் போக்கு இருந்து வருகிறது.

சினிமாத்துறைக்கு தொடர்பில்லாதவர்கள் தணிக்கைக் குழுவில் இருப்பதால், படைப்பாளிகளுக்கு சுதந்திரமின்மை நிலவுவதாகக் கூறப்பட்டு வருகிறது. இந்நிலையில், இந்தக் குற்றச்சாட்டை மாற்றும் பொருட்டு மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத் துறை அமைச்சகம், சினிமா சார்ந்த மூத்த கலைஞர்களை தணிக்கை குழுவில் இணைத்து தணிக்கை குழு உறுப்பினர்கள் எண்ணிக்கையை அதிகரிக்கத் திட்டமிட்டுள்ளது.

அதன் முதல் கட்டமாகவே தற்போது கமல்ஹாசனை தணிக்கை குழு உறுப்பினராக்க முடிவு செய்திருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. மிக விரைவில் இது தொடர்பாக அதிகாராப்பூர்வமான அறிவிப்புகள் வெளியாகலாம் என்றும் கூறப்படுகிறது.