Home நாடு ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான் வேண்டுகோள்

ஜோகூர் இளவரசர் ஜேடிடி கிளப் தலைமைப் பொறுப்பைத் தொடர்ந்து வகிக்க வேண்டும் – சுல்தான் வேண்டுகோள்

374
0
SHARE
Ad

ஜோகூர் பாரு: ஜேடிடி (JDT) என்னும் ஜோகூர் டாருல் தாக்சிம் காற்பந்து சங்கத்தின் (கிளப்) தலைவராக ஜோகூர் இளவரசர் துங்கு இஸ்மாயில் தொடர்ந்து செயல்பட வேண்டுமென ஜோகூர் சுல்தான் அறிவுரை வழங்கியுள்ளார்.

நேற்று வியாழக்கிழமை (ஜூன் 16) ஜோகூர் மாக்கோத்தா (இளவரசர்) துங்கு இஸ்மாயிலை ரீஜண்டாக நியமனம் செய்வதாக ஜோகூர் சுல்தான் இப்ராகிம் அறிவித்தார்.

நேற்று ஜோகூர் மாநில சட்டமன்றக் கூட்டத்தைத்
தொடக்கி வைத்து உரையாற்றிய பின்னர் ஜோகூர் ஆட்சியாளர் சுல்தான் இப்ராஹிம் தனது புதல்வர் துங்கு மக்கோத்தா துங்கு இஸ்மாயிலை ரீஜண்டாக
நியமிப்பதாகவும், தான் குறுகிய கால ஓய்வில் செல்லவிருப்பதாகவும் அறிவித்தார்.

#TamilSchoolmychoice

இதைத் தொடர்ந்து ஜோகூர் மாநில ஆட்சியாளருக்கான கடமைகளையும் பொறுப்புகளையும் இடைக்கால ஆட்சியாளராக இனி சுல்தான் இஸ்மாயில் ஆற்றி வருவார்.

துங்கு இஸ்மாயிலை ரீஜண்டாக நியமித்தது நேற்று வியாழன் (ஜூன் 16) முதல் அமலுக்கு வரும் என்றும் ஜோகூர் சுல்தான் தெரிவித்தார்.

கடந்த ஜூன் 9-ஆம் தேதியன்று ஜோகூர் டாருல் தாசிமின் (JDT) உரிமையாளரான துங்கு இஸ்மாயில், அந்தக் கால்பந்து கிளப்பை நிர்வகிப்பதில் இருந்து விலகிக் கொள்ள முடிவு செய்ததாக அறிவித்தார்.

மலேசியக் காற்பந்து உலகில் இந்த முடிவு அனைவருக்கும் அதிர்ச்சியளிப்பதாக அமைந்தது.

“எனது மற்ற பொறுப்புகள் காரணமாக, நான் பதவி விலக முடிவு செய்து, ஜேடிடி கால்பந்து கிளப்பின் அன்றாட விவகாரங்களை கிளப்பின் உயர் நிர்வாகத்திடம்
ஒப்படைக்க முடிவு செய்துள்ளேன்” என துங்கு இஸ்மாயில் தெரிவித்திருந்தார்.