Home நாடு ஜோகூர் இளவரசருக்கும் கொவிட்-19 தொற்று

ஜோகூர் இளவரசருக்கும் கொவிட்-19 தொற்று

1274
0
SHARE
Ad

ஜோகூர் பாரு : கொடிய கொவிட் தொற்று குடிசையில் வசிப்பவர்களானாலும், அரண்மனையில் வாழும் கோமகன்கள் என்றாலும் யாரையும் விட்டு வைப்பதில்லை என்பது மீண்டும் ஒருமுறை நிரூபணமாகியிருக்கிறது.

ஜோகூர் இளவரசர் (துங்கு மக்கோத்தா) துங்கு இஸ்மாயில் இப்னி சுல்தான் இப்ராகிம் தனக்கும் கொவிட்-19 பாதித்திருப்பதாக அறிவித்திருக்கிறார்.

நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவர் தான் கொவிட்-19 தொற்றால் பாதிக்கப்பட்டிருப்பதைத் தெரிவித்தார்.

#TamilSchoolmychoice

மருத்துவமனைப் படுக்கையில் படுத்துக் கொண்டிருக்கும் புகைப்படம் ஒன்றைப் பதிவிட்ட துங்கு மக்கோத்தா “அதில் சில நாட்களுக்கு முன்னர்” என்றும் “கொவிட்-19 உடன் இரண்டு வாரங்களும் இப்போதும்..” என அதில் குறிப்பிட்டார்.

“உடல் ரீதியாகவும் மன ரீதியாகவும் சில வாரங்கள் சோர்ந்திருந்தேன். உங்களின் வாழ்த்துகளுக்கு நன்றி” எனவும் துங்கு மக்கோத்தா பதிவிட்டார்.

தற்போது உடல் நலம் தேறிவிட்டதைச் சுட்டிக் காட்டும் விதத்தில் “புலி மீண்டும் வந்து விட்டது” என்றும் அவர் தெரிவித்திருக்கிறார்.


Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal

மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal