கோலாலம்பூர் : நேற்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்ற தேசிய அளவிலான மஇகா இளைஞர், மகளிர், புத்ரா, புத்திரி பிரிவுகளுக்கான பதவிகளுக்கான வேட்புமனுத் தாக்கல் இன்று வெள்ளிக்கிழமை (அக்டோபர் 22) மஇகா தலைமையகத்தில் நடைபெற்றது.
மஇகா இளைஞர் பகுதிக்கான தலைவராக ஜோகூர் தெங்காரோ சட்டமன்ற உறுப்பினர் கே.ரவீன் குமார் அடுத்த 3 ஆண்டுகள் கொண்ட தவணைக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
இவர் ஜோகூர் மாநிலத்தின் முன்னாள் சட்டமன்ற உறுப்பினரான அமரர் கிருஷ்ணசாமியின் புதல்வராவார்.
தேர்தல் வேட்புமனுத் தாக்கலுக்கான தலைவராகச் செயல்பட்ட தேசியத் தலைவர் டான்ஶ்ரீ ச.விக்னேஸ்வரன் வேட்புமனுத் தாக்கல்கள் முடிவடைந்த பின்னர் முடிவுகளை அறிவித்தார்.
38 வயதான ரவீன் குமார் 2015 முதல் 2018 வரை புத்ரா மஇகா தலைவராகப் பதவி வகித்திருக்கிறார். இதுவரையில் இளைஞர் பகுதித் தலைவராகப் பதவி வகித்த நெகிரி செம்பிலானைச் சேர்ந்த தினாளனுக்குப் பதிலாக ரவீன் குமார் நேற்று தேர்ந்தெடுக்கப்பட்டார்.
தினாளன் தனது பதவியைத் தற்காத்துக் கொள்ள மீண்டும் போட்டியிடவில்லை.
இளைஞர் பகுதிக்கான துணைத் தலைவராக மஇகா கூட்டரசுப் பிரதேசத்தைச் சேர்ந்த ஆண்ட்ரூ டேவிட் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
Join us on our Telegram channel for more news and latest updates: https://t.me/selliyal
மேலும் கூடுதலான அண்மையச் செய்திகளைத் தெரிந்து கொள்ள எங்களின் Telegram (டெலிகிராம்) குறுஞ்செயலி இணைப்பில் இணைந்திருங்கள்: https://t.me/selliyal