Home உலகம் தென் கொரியா-வட கொரியா இடையே சுமூக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

தென் கொரியா-வட கொரியா இடையே சுமூக பேச்சுவார்த்தையில் முன்னேற்றம்!

548
0
SHARE
Ad

south-north koreaசியோல் – தென் கொரியா-வட கொரியா எல்லைகளில் கடந்த சில நாட்களாக இருந்து வந்த போர் பதற்றம், இருநாட்டு அதிகாரிகளின் சுமூக பேச்சுவார்த்தைகளால் சற்றே தணிந்துள்ளது.

இது தொடர்பாக இன்று வெளியாகி உள்ள தகவல்கள் படி, தென் கொரியா, வட கொரியாவின் கோரிக்கைக்கு இணங்க, எல்லைப் பகுதியில் ஆத்திரமூட்டும் பிரச்சார ஒலிபரப்புக்களை  நிறுத்திக் கொள்வதாக ஒப்புக் கொண்டது. அதேபோல், வட கொரியாவும், தென் கொரியாவின் சில கோரிக்கைகளுக்கு செவி சாய்த்துள்ளது. இதன் மூலம் எல்லையில் ஏற்பட்டிருந்த போர் பதற்றம் முடிவிற்கு வந்துள்ளதாகக் கூறப்படுகிறது.

இது தொடர்பாக தென் கொரிய அதிபரின் பாதுகாப்பு ஆலோசகரான கிம் க்வான்-ஜின்  கூறுகையில், “இரு நாடுகளுக்கு இடையேயான 30 மணி நேர பேச்சுவார்த்தை முடிவிற்கு வந்துள்ளது. அடுத்தகட்டப் பேச்சுவார்த்தைகளை, மிக விரைவில் சியோல் அல்லது பியாங்யாங்கில் மேற்கொள்வதற்கு ஒப்புக் கொள்ளப்பட்டுள்ளது” என்று கூறியுள்ளார்.