Home Featured நாடு மொகிதீன் கட்சியின் துணைத்தலைவராக இருப்பதை மதிக்கின்றோம் – கைரி

மொகிதீன் கட்சியின் துணைத்தலைவராக இருப்பதை மதிக்கின்றோம் – கைரி

784
0
SHARE
Ad

KhairyJamaluddin_ShahrinYahya_2கோலாலம்பூர் – துணைப் பிரதமர் அகமட் சாஹிட் ஹமீடியை அம்னோ துணைத்தலைவராக பொறுப்பு வழங்கும் படி தீர்மானம் ஒன்று கொண்டு வரப்பட்டுள்ள வேளையில், நடப்பு அம்னோ துணைத் தலைவரான மொகிதீன் யாசினின் மீது இன்னும் தங்களுக்கு மரியாதை இருப்பதாக அம்னோ இளைஞர் பிரிவு கருத்துத் தெரிவித்துள்ளது.

இது குறித்து அம்னோ இளைஞர் பிரிவுத் தலைவர் கைரி ஜமாலுதீன் கூறுகையில், கடந்த மாதம் மொகிதீன் யாசின் துணைப் பிரதமர் பதவியிலிருந்து விலக்கப்பட்டாலும் கூட, அவர் அம்னோ துணைத்தலைவராகப் பொறுப்பு வகித்து வருவதில் எங்களுக்கு மிகுந்த மரியாதை உண்டு என்று தெரிவித்துள்ளார்.