Home இந்தியா வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு: முதன்முறையாகப் பீகாரில் அறிமுகம்!

வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிக்க வாய்ப்பு: முதன்முறையாகப் பீகாரில் அறிமுகம்!

550
0
SHARE
Ad

Election-Commission-of-Indiaபுதுடில்லி, ஜூன் 16- வெளிநாடு வாழ் இந்தியர்கள் தங்கள் வசிக்கும் நாடுகளில் இருந்தவாறே பீகாரில் நடைபெறவுள்ள சட்டசபைத் தேர்தலில் ஓட்டளிக்க வாய்ப்பு கிடைக்க உள்ளது.

இந்தியாவில் பிறந்து வெளிநாட்டிற்குச் சென்று வேலை பார்த்து வரும் இந்தியர்களுக்கு நீண்ட காலமாக ஓட்டுரிமை வழங்கப்படவில்லை; 2010-ல் தான் வழங்கப்பட்டது.

ஆனால், ஓட்டுப் போட இந்தியாவிற்கு வர வேண்டியிருந்தது. அதனால் பலர் இதை விரும்பவில்லை; 20 சதவீதம் பேர் கூட ஓட்டளிக்க வரவில்லை.

#TamilSchoolmychoice

அதனால் மத்திய அரசு, வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் ஓட்டளிப்பதற்கு வசதியாக மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் மாற்றம் செய்வது என முடிவு செய்துள்ளது.

அதற்காக,’ஒருவழி மின்னணு  தபால் ஓட்டுமுறை’ எனப்படும் முறையைப் பின்பற்றத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேர்தல் ஆணையத்தின் இணையத்திற்குச் சென்று, வேட்பாளர் பெயர் பட்டியல் அடங்கிய ஓட்டுச் சீட்டைப் பெறும் வெளிநாட்டு வாழ் இந்தியர், அதில் தான் விரும்பும் வேட்பாளர் பெயரை tick செய்து அந்தப் படிவத்தைப் பதிவிறக்கம் செய்ய வேண்டும்.

அதன் பின் அந்தப் படிவத்தைத் தன் தொகுதியின் தேர்தல் அதிகாரிக்குத் தபாலில் அனுப்பி வைக்க வேண்டும்.

இந்த முறை, முதன்முறையாகப் பீகாரில் நடக்கவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது.