Home கலை உலகம் விஜய்யின் ‘புலி’ படத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி!

விஜய்யின் ‘புலி’ படத்தில் ஷாலினியின் தங்கை ஷாமிலி!

431
0
SHARE
Ad

puliசென்னை, ஜூன் 16 – சிம்புதேவன் இயக்கத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடித்துவரும் திரைப்படம் ‘புலி’ . ஹன்சிகா, ஸ்ருதி ஹாசன், ஸ்ரீதேவி, சுதீப், தம்பிராமையா நடித்து வரும் இப்படத்திற்கு இசை தேவிஸ்ரீபிரசாத்.

படத்தின் முதல் சுவரொட்டி மற்றும் முன்னோட்டம் வெளியாகக் காத்திருக்கும் தறுவாயில், அடுத்தக் கட்டத் தகவலாகப் படத்தில் முக்கிய தோற்றத்தில் நடிக்கும் ஷாலினியின் தங்கை ஷாமிலி குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

படத்தில் ஷாமிலி சுதீப்புக்கு ஜோடியாக நடிக்கிறாராம். ஷாலினியின் தங்கையும், அஜித்தின் மைத்துனியுமான ஷாமிலி, ராஜநடை படம் மூலம் சினிமாவிற்கு அறிமுகமானவர். மணிரத்னம் இயக்கத்தில் வெளியான ‘அஞ்சலி’ படம் மூலம் சிறந்த குழந்தை நட்சத்திரத்திற்காகத் தேசிய விருது பெற்றவர்.

#TamilSchoolmychoice

தமிழில் குழந்தை நட்சத்திரமாகப் பல படங்களில் நடித்தார். ’கண்டுகொண்டேன் கண்டுகொண்டேன்’ படத்தில் தபுவுக்குத் தங்கையாக நடித்ததோடு, பின்னர் தெலுங்கு, மலையாளம், கன்னடம் எனப் பல படங்களில் நடித்தார்.

கடைசியாக 2009ல் தெலுங்கில் வெளியான ‘ஓய்’ படத்திற்குப் பிறகு பெரிதாகப் பட வாய்ப்பு ஏதும் இல்லை. தற்போது ’புலி’ படம் மூலம் மீண்டும் தமிழில் காலடி எடுத்து வைக்க இருக்கிறார் ஷாமிலி.