Home இந்தியா மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் சிக்கல்!  

மாயமான டோர்னியர் விமானத்தைத் தேடும் பணியில் சிக்கல்!  

429
0
SHARE
Ad

flitசென்னை, ஜூன்15- இந்தியக் கடலோரக் காவல் படைக்குச் சொந்தமான டோர்னியர் என்ற குட்டி விமானம் மாயமாய் மறைந்து இன்றோடு 8  நாட்கள் ஆகிவிட்டன.

கடந்த 9–ந் தேதி முதல் இந்த விமானத்தைத் தேடும் பணி தீவிரமாக நடந்து வருகிறது.

இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான கப்பல்கள், படகுகள், ஹெலிகாப்டர்கள், பாரா மோட்டார் ஆகியவை இந்தத் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.

#TamilSchoolmychoice

இவைதவிர, இந்தியக் கடற்படைக்குச் சொந்தமான ‘சந்தியாக்’ ஹைட்ரோகிராபிக் சர்வே கப்பலும் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்தக் கப்பல் நேற்று முன்தினம் தேடும் பணியில் ஈடுபட்டிருந்தபோது, கடலுக்கு அடியில் இருந்து, காணாமல் போன குட்டி விமானத்தின் கருப்புப் பெட்டியிலிருந்து சமிக்ஞை வருவது கண்டு பிடிக்கப்பட்டது.

அதாவது, 37.5 கிலோ ஹெட்ஸ் அலைவரிசையுடன் கூடிய அந்ச் சமிக்ஞை மிகவும் பலவீனமாக இருந்தது; தொடர்ச்சியாக வராமல் விட்டு விட்டும் வந்தது.

சமிக்ஞை வந்த இடத்தில் சிந்துத்வாஜ் நீர்மூழ்கிக் கப்பல் தேடும் பணியில் ஈடுபட்டு வருகிறது.

இந்நிலையில், இந்தப் பகுதியில் எண்ணெய்ப் படலம் மிதப்பதும் நேற்று முன்தினம் கண்டுபிடிக்கப்பட்டது.

57cae640228fc743d5caa4641e07b434எனவே, கடலில் விமானம் அந்த இடத்தில்தான் விழுந்து இருக்க வேண்டும் என்றும், 750 அடி ஆழத்தில் அது கிடக்கலாம் என்றும் கருதப்படுகிறது.

நீர்மூழ்கிக் கப்பலுடன்,. தேசிய கடல் ஆய்வு நிறுவனத்தைச் சேர்ந்த நிபுணர்கள் குழுவும் கருப்புப் பெட்டியைத் தேடும் பணியில் ஈடுபட்டு வருகின்றது.

இதற்கிடையில் எந்த இடத்தில் சமிக்ஞை வந்ததோ, அந்த இடத்தில் தற்போது எந்தச் சமிக்ஞையும் வரவில்லை. மேலும்,அந்த இடம் சேறும் சகதியுமாக இருப்பதால்  தேடும் பணியில் சிக்கல் ஏற்பட்டுள்ளது