மும்பை தாதரில் அம்பேத்கருக்கு நினைவிடம் கட்ட வேண்டும் என ஆனந்தராஜ் அம்பேத்கர் போராடி வருகிறார். இதற்குச் சிவசேனா உள்ளிட்ட கட்சிகள் எதிர்ப்புத் தெரிவித்து வருகின்றன.
இந்தச் சூழ்நிலையில் மகாராஷ்டிரா மாநிலம் ராய்கட் மாவட்டத்தில் உள்ள கல்லூரி ஒன்றிற்கு அதன் முதல்வரைச் சந்திப்பதற்காக ஆனந்தராஜ் சென்றார்.
அப்போது ஆயுதம் தாங்கிய வன்முறைக் கும்பல் கல்லூரி வளாகத்துக்குள் புகுந்து, ஆனந்தராஜ் அம்பேத்கர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் மீது சரமாரித் தாக்குதல் நடத்தியது.
இதில் ஆனந்தராஜின் ஆதரவாளர் ஒருவர் படுகாயமடைந்தார். ஆனந்தராஜ் தெய்வாதீனமாக உயிர் தப்பினார்.
Comments