டொயோடா வாகனங்களின் ஏற்பட்ட இந்த பழுதைத் தொடர்ந்து, அந்த காரின் பயனீட்டாளர்களுக்கு சுமார் நஷ்ட ஈடாக ரொக்கமாக பணம் வழங்க அந்நிறுவனம் ஒப்புக்கொண்டுள்ளது. இதற்காக கோடிக்கணக்கான பணத்தை அந்நிறுவனம் செலவிடும்.
மேலும், 74.3 லட்சம் வாகனங்களை திரும்பப் பெறவும் டொயோட்டா சம்மதம் தெரிவித்தது.
டொயோடா கார்களின் ஆக்சிலரேஷனில் ஏற்பட்ட குறைபாட்டைத் தொடர்ந்து அந்நிறுவனத்துக்கு எதிராக வாகன உரிமையாளர்கள் அமெரிக்க நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தனர்.
இந்த வழக்கில் உரிமையாளர்களுக்கு உரிய நஷ்ட ஈடு அளிக்கவும், வாகனங்களைத் திரும்பப் பெறவும் டொயோடா நிறுவனம் புதன்கிழமை ஒப்புக்கொண்டது.
இதைத் தொடர்ந்து சர்வதேச அளவில் விற்பனையான குறைபாடுகளுடன் உடைய 74.3 லட்சம் டொயோடா கார்களை அந்நிறுவனம் திரும்பப் பெறும்.இருப்பினும், நிறுவனத்தின் முடிவுக்கு அமெரிக்க நீதிமன்றம் ஒப்புதல் அளிக்க வேண்டும்.