Home Slider பதவி ஓய்வு பெறும் ரத்தன் டாடா

பதவி ஓய்வு பெறும் ரத்தன் டாடா

1013
0
SHARE
Ad

மும்பை,டிச.27 –  இந்தியாவின் பாரம்பரிய வர்த்தக நிறுவனமாகத் திகழ்ந்த டாடா குழுமத்தின் தலைவர் பொறுப்பில் இருந்து ரத்தன் டாடா 2012 ஆண்டு இறுதியோடு ஓய்வு பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து புதிய தலைவராக சைரஸ் மிஸ்ட்ரி பொறுப்பு ஏற்கிறார்.

டாடா குழும நிறுவனத்தை நூறு பில்லியன் டாலர் அளவுக்கான உலகளாவிய வர்த்தக சாம்ராஜ்யமாக மாற்றிய பெருமை கொண்டவர் ரத்தன் டாடா. இந்தியாவின் மிகப் பழைமையான வர்த்தக சாம்ராஜ்யத்தில் அவருடைய 50 ஆண்டு கால பணி தற்போது நிறைவு பெற்றுள்ளது.

தற்போது 75 வயதை எட்டும் ரத்தன் டாடா, தன்னுடைய பொறுப்புகளை 44 வயதான சைரஸ் மிஸ்ட்ரியிடம் ஒப்படைக்கிறார். சைரஸ் மிஸ்ட்ரி சென்ற வருடம் தலைமைப் பொறுப்புக்கு முறையாகத் தேர்ந்தெடுக்கப்பட்டு நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

ரத்தன் டாடா 21 வருடங்கள் குழும தலைவராக இருந்துள்ளார். 1991ஆம் ஆண்டு  ஜேஆர்டி டாடாவுக்குப் பிறகு தலைமைப் பொறுப்பை ஏற்று திறம்பட நிறுவனத்தை நடத்தி வந்துள்ளார். தற்போது பொறுப்பேற்கும் மிஸ்ட்ரி, ஷபூர்ஜி பலோன்ஜி குழுமத்தின் குடும்ப உறுப்பினர். இவர்கள் டாடா சன்ஸ் நிறுவனத்தில் 18% பங்குகளைக் கொண்டிருப்பவர்கள். இவர் ஐந்து நபர் தேர்வுக் குழுவால் தேர்வு செய்யப்பட்டிருப்பவர்.

ரத்தன் டாடாவின் காலத்தில் டாடா குழுமம் பெரும் வளர்ச்சி கண்டுள்ளது. நூறு பில்லியன் அமெரிக்க டாலர் அளவுக்கு 2011-2012 கால கட்டத்தில் வளர்ச்சி கண்டுள்ளது. 199ஆம் ஆண்டு இந்த நிறுவனத்தின் வருவாய் மதிப்பு ரூ.10 ஆயிரம் கோடியாக இருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

இங்கிலாந்திலுள்ள கார்னெல் பல்கலைக்கழகத்தில் கட்டமைப்பு பொறியியலில் பட்டப் படிப்பை முடித்தவர் ரத்தன் டாடா. பின்னர் ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் முதுநிலை மேலாண்மையில் பட்டம் பெற்றார். நூற்றுக்கும் மேற்பட்ட நிறுவனங்கள் கொண்ட டாடா குழுமத்தின் பல்வேறு பொறுப்புகளை திறம்பட நிர்வகித்துள்ளார் ரத்தன் டாடா.

பல்வேறு சமூக சேவைகளுக்கு தன்னை அர்ப்பணித்துக் கொண்ட ரத்தன் டாடாவுக்கு பத்மபூஷண், பத்மவிபூஷண் உள்ளிட்ட நாட்டின் உயரிய விருதுகள் வழங்கப்பட்டுள்ளன.