Home வணிகம்/தொழில் நுட்பம் இந்தியாவில் 100-வது கிளையைத் திறக்கிறது ஸ்டார்பக்ஸ்!

இந்தியாவில் 100-வது கிளையைத் திறக்கிறது ஸ்டார்பக்ஸ்!

1265
0
SHARE
Ad

Starbucks,_Mumbaiமும்பை – பாரம்பரியமாக காப்பி அருந்தும் கலாச்சாரத்தைக் கொண்ட இந்தியாவில் கால் பதித்திருக்கும் ஸடார்பக்ஸ் என்ற காப்பி மற்றும் சிற்றுண்டிகளில் சிறப்பு பெற்ற தொடர் உணவகம், கடந்த 5 ஆண்டுகளாக வெற்றிகரமாக இயங்கி தற்போது தனது 100-வது கிளையை மும்பை நகரில் திறந்திருக்கிறது.

இந்தியாவின் மாபெரும் தொழில் நிறுவனமான டாட்டாவுடன் இணைந்து ஸ்டார்பக்ஸ் செயல்பட்டு வருகிறது. இருநிறுவனங்களும் தலா 50 சதவீதப் பங்குடமைகளைக் கொண்டு, டாடா குளோபல் பெவரேஜஸ் லிமிடெட் (Tata Global Beverages Limited) என்ற நிறுவனத்தை அமைத்து அந்நிறுவனத்தின் மூலம் ஸ்டார்பக்ஸ் தொடர் உணவகங்களை இந்தியாவில் திறந்து வருகிறது.

2018-ஆம் ஆண்டில் கொல்கத்தா நகரில் 3 உணவகங்களை ஸ்டார்பக்ஸ் திறக்கவிருக்கிறது. தொடர்ந்து மற்ற நகர்களிலும் ஸ்டார்பக்ஸ் தனது உணவகங்களை அமைக்கிறது.

#TamilSchoolmychoice

அடுத்த ஐந்தாண்டுகளில் தனது பணியாளர்களின் எண்ணிக்கையை இருமடங்காக அதிகரித்து 3 ஆயிரமாக உயர்த்தவும் ஸ்டார்பக்ஸ் திட்டமிட்டிருக்கிறது.

தனது முதல் கிளையை ஸ்டார்பக்ஸ் 2012-ஆம் ஆண்டில் மும்பை நகரில் திறந்தது. தற்போது மும்பை, பூனே, ஹைதராபாத், சென்னை, டில்லி, பெங்களூரு ஆகிய ஆறு நகர்களில் ஸ்டார்பக்ஸ் இயங்கி வருகிறது.

1971-ஆம் ஆண்டில் முதன் முதலாக அமெரிக்காவில் தனது வணிகத்தைத் தொடக்கிய ஸ்டார்பக்ஸ், உயர்தர அராபிகா என்ற காப்பி வகைகளை நேரடியாக உலகின் பல நாடுகளில் இருந்து கொள்முதல் செய்து, தனது பிரத்தியேக பானமாகத் தயாரித்து விற்பனை செய்வதோடு, இந்த அடிப்படையில் தொடர் உணவகங்களாகவும், மற்றவர்களுக்கு உரிமம் வழங்கியும் உணவகங்களை நடத்தி வருகிறது.