Home இந்தியா கருணாநிதி கொள்ளுப் பேரனுக்கும், விக்ரம் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது!

கருணாநிதி கொள்ளுப் பேரனுக்கும், விக்ரம் மகளுக்கும் திருமணம் நடைபெற்றது!

2073
0
SHARE
Ad

Karunanidhi grandson -Vikram daughter marriageசென்னை – திமுக தலைவர் மு.கருணாநிதியின் மகன் மு.க.முத்துவின் பேரன் மனு இரஞ்சித்திற்கும், நடிகர் விக்ரமின் மகள் அக்‌ஷதாவிற்கும் இன்று திங்கட்கிழமை தமிழ் முறைப்படி திருமணம் நடைபெற்றது.

இத்திருமணத்தை கருணாநிதி தாலி எடுத்துக் கொடுத்து மணமக்களை வாழ்த்தினார்.

இத்திருமணத்தில், மு.க.அழகிரி, ஸ்டாலின் மனைவி துர்கா, கவிஞர் வைரமுத்து, கனிமொழி மற்றும் விக்ரம் குடும்பத்தார் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

#TamilSchoolmychoice

முத்துராமலிங்கத் தேவர் நினைவிடத்திற்குச் சென்றதால் மு.க.ஸ்டாலினும், உடல்நலம் சரியில்லாத காரணத்தால் மு.க.முத்துவும் இத்திருமணத்தில் கலந்து கொள்ளவில்லை.