Home Video வீர தீர சூரன் – மார்ச் 27 வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!

வீர தீர சூரன் – மார்ச் 27 வெளியீடு – பரபரப்பான முன்னோட்டம்!

106
0
SHARE
Ad

சென்னை: விக்ரம் நடிப்பில் எதிர்வரும் மார்ச் 27-ஆம் தேதி வெளியாகிறது ‘வீர தீர சூரன்’. அவருடன் இணைந்து காவல் துறை அதிகாரியாக மிரட்ட வருகிறார் எஸ்.ஜே.சூர்யா.

சித்தார்த் நடிப்பில் வெளிவந்து வெற்றி பெற்ற ‘சித்தா’ படத்தின் இயக்குநர் எஸ்.யு.அருண்குமார் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் ‘வீர தீர சூரன்’.

அண்மைய ஆண்டுகளில் விக்ரம் நடிப்பில் வெளிவந்த படங்களில் எதுவுமே குறிப்பித்தக்க அளவில் வசூலிலும் சாதிக்கவில்லை. எனவே, முன்னோட்டங்கள் அடிப்படையில் வீரதீர சூரன் படத்தை ஏற்கனவே பார்த்தவர்கள் பார்வையிலும் படம் சிறப்பாக வந்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

#TamilSchoolmychoice

இந்தப் படத்தின் பரபரப்பான முன்னோட்டம் வெளிவந்து இலட்சக்கணக்கான ரசிகர்களைக் கவர்ந்து வருகிறது. அந்தப் படத்திற்கான முன்னோட்டத்தைக் கீழ்க்காணும் யூடியூப் இணைப்பில் காணலாம்: