கோலாலம்பூர் – நமது நாட்டின் பெட்ரோலிய வளங்களை நிர்வகிக்கும் அதிகாரபூர்வ நிறுவனமான பெட்ரோனாசும், இந்தியாவின் முன்னணி கணினி-மென்பொருள் துறை நிறுவனமுமான டாடா கொன்சல்டன்சி நிறுவனமும் தொழில்நுட்பத் திட்டம் ஒன்றுக்காக இணைந்து உடன்பாடு கண்டிருக்கின்றன.
எண்ணெய் மற்றும் எரிவாயு சுத்திகரிப்பு, சந்தைப்படுத்துதல் போன்ற அம்சங்களில் தரவுகளைக் கொண்ட கணினித் தளம் ஒன்றை உருவாக்கும் பணியில் இந்த இரண்டு நிறுவனங்களும் இணைந்து ஈடுபடும்.
டிசிஎஸ் எனப்படும் டாடா கொன்சல்டன்சி நிறுவனத்தின் ஆசியா-பசிபிக் வட்டாரத்திற்கான தலைவர் கிரிஷ் இராமச்சந்திரன் இதுகுறித்து கருத்துரைக்கையில் இந்தத் திட்டத்தின் மூலம் பெட்ரோனாஸ் தனது வாடிக்கையாளர்களுக்கு மேலும் சிறந்த முறையில் சேவைகளை வழங்க முடியும் எனத் தெரிவித்தார்.
இரு நிறுவனங்களுக்கும் இடையிலான உடன்பாட்டின் வணிக மதிப்பு குறித்து தகவல்கள் வெளியிடப்படவில்லை.