ஆக்ரா, ஜூன் 27- தூய்மை இந்தியா திட்டத்தைச் செயல்படுத்துவதில் பிரதமர் மோடி தீவிரமாக இருக்கிறார். அவ்வகையில், பிரதமர் மோடியின் ‘சுவச் பாரத்’ திட்டத்தின்படி தொடர்வண்டித்துறைக் காவல்துறையினர்(railway police) இந்தியாவிலேயே முதன்முறையாகப் பொது இடங்களை அசுத்தப்படுத்தியவர்கள் மீது நடவடிக்கை எடுத்துள்ளனர்..
இந்தியத் தொடர்வண்டித் துறைக்குச் சொந்தமான நடைமேடைகள், தண்டவாளப் பகுதிகள்,தொடர்வண்டி நிறுத்தத்தின் பின்புறம் உள்ளிட்ட பொது இடங்களில், அதுவும் பெண்கள் மற்றும் குழந்தைகள் நடமாட்டம் மிகுந்த இடங்களில் சிறுநீர் கழித்த 109 பேரைக் கைது செய்துள்ளனர்.
அவர்களுக்கு 24 மணிநேரச் சிறை தண்டனையும் அபராதமும் விதிக்கப்பட்டுள்ளது.
பொது இடங்களில் சிறுநீர் கழித்தல், பான் மசாலா போன்ற எச்சிலை உமிழ்தல், மது அருந்துதல் போன்ற அநாகரிகச் செயல்களில் ஈடுபடுபவர்களுக்குச் சிறைத் தண்டனையும் ரூ 500க்கும் மேல் அபராதமும் விதிக்கப்படும். இனி இந்த நடவடிக்கைகள் தீவிரமாக்கப்படும் என்று காவல்துறையினர் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.