நியூயார்க், சென்னை 27- ஐ.நா.சபை, “உருமாறும் கலையின் ஆற்றல்” என்ற பெயரில் கண்காட்சி ஒன்றைத் தனது தலைமையகத்தில் அமைத்துள்ளது.
மனித குலத்திற்குத் தொண்டாற்றிய உலகின் பிரபலமானவர்களைக் கெளரவிக்கும் விதமாக, அவர்களின் உருவப்படங்களை இந்தக் கண்காட்சியில் வைத்துள்ளது.
பழங்காலத் தொழில்நுட்பங்களுடன் சமகாலத் தொழில்நுட்பங்களையும் பயன்படுத்திய சிந்தனையாளர்கள், கலைஞர்கள் என அனைத்துக் கண்டங்களையும் சேர்ந்த பிரபலமான 16 பேரின் உருவங்கள் இந்தக் கண்காட்சியில் அமைக்கப்பட்டுள்ளன.
இதில் இந்தியாவின் தலைசிறந்த இயக்குநர்களில் ஒருவராகக் கருதப்படும் சத்யஜித் ரேவின் புகைப்படமும் இடம்பெற்றுள்ளது.
1992ம் ஆண்டு ஆஸ்கார் விருது பெற்ற சத்யஜித்ரே, அதே ஆண்டு இந்தியாவின் உயரிய விருதான பாரத ரத்னா விருதினையும் பெற்றவர்.
உலகின் தலைசிறந்த 16 பிரபலங்களின் பட்டியலில் இந்திய இயக்குநர் ஒருவரின் படமும் இடம்பெற்றிருப்பது இந்தியாவிற்குக் கிடைத்த மிகப் பெரிய கெளரவமாகும்.
ஐ.நா., பொதுச் சபையின் தலைவர் சாம் குடேசியின் ஏற்பாட்டால் அமைக்கப்பட்டுள்ள இந்தக் கண்காட்சி, ஜூன் 30-ஆம் தேதி பொது மக்களின் பார்வைக்காகத் திறக்கப்பட உள்ளது.