Home இந்தியா டில்லியில் “டெசோ’ மாநாடு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

டில்லியில் “டெசோ’ மாநாடு காங்கிரஸ் தலைவர்கள் பங்கேற்பு

774
0
SHARE
Ad

stalinபுதுடில்லி, மார்ச்.8- இலங்கை தமிழர் பிரச்னை தொடர்பாக, தி.மு.க., பொருளாளர் ஸ்டாலின் தலைமையில், “டெசோ” மாநாடு மற்றும் கருத்தரங்கம் டில்லியில் நேற்று மாலை துவங்கியது.

இதில், காங்கிரஸ் கட்சி சார்பில் குலாம் நபி ஆசாத் உட்பட தலைவர்கள் பங்கேற்றனர்.

மாநாட்டில் ஸ்டாலின் பேசுகையில், “இலங்கையில் தமிழர்கள் சுயகவுரவத்துடனும் சம அந்தஸ்துடனும் நடத்தப்பட வேண்டும். இலங்கையில் இறுதிக்கட்ட போரின் போது நடந்த மனித உரிமை மீறல்கள் குறித்து சுதந்திரமான சர்வதேச விசாரணை நடத்தப்பட வேண்டும்,” என வலியுறுத்தினார்.

#TamilSchoolmychoice

மாநாட்டில் சேனல் – 4 வெளியிட்ட ஆவணப்படம் வெளியிடப்பட்டது. பின் கருத்தரங்கில் இயற்றப்பட்ட தீர்மானத்தில், “இலங்கைக்கு எதிராக, ஜெனீவாவில் நடக்கும் ஜ.நா., மனித உரிமை கவுன்சில் கூட்டத்தில் அமெரிக்கா கொண்டு வரவிருக்கும் தீர்மானத்திற்கு மத்திய அரசு ஆதரவு அளிக்க வேண்டும்’ என, குறிப்பிடப்பட்டது.

மாநாட்டில் கனிமொழி சிறப்புரையாற்றினார். மேலும், காங்கிரஸ் சார்பில் சுதர்சன நாச்சியப்பன், தமிழக காங்., தலைவர் ஞானதேசிகன், சித்தன் ஆகியோரும், தேசியவாத காங்கிரஸ் கட்சி சுப்ரியா சுலேவும் கலந்து கொண்டனர்.

மாநாட்டில் பங்கேற்கும்படி, பா.ஜ., – சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், தெலுங்கு தேசம், சிவசேனா, ஆகிய கட்சிகளுக்கு அழைப்பு அனுப்பப்பட்டு இருந்தது.

ஆனால், இக்கட்சிகள் சார்பில் பிரதிநிதிகள் யாரும் பங்கேற்கவில்லை. இம்மாநாட்டில் காங்கிரஸ் கட்சி பங்கேற்குமா என்ற சந்தேகம் நிலவியது.

இந்நிலையில்  காங்., தலைவர்கள் பங்கேற்றதால் இலங்கைக்கு எதிரான ஐ.நா., தீர்மானத்திற்கு ஆதரவு தெரிவிப்பது குறித்து  காங்கிரஸ் தலைவர்கள் உறுதியளித்தனரா என்று கேட்டபோது, “டெசோ’ மாநாட்டை முன்னின்று நடத்தும் தலைவர்களில் ஒருவர், “இது முக்கியமான முன்னேற்றம்” என்று மட்டும் குறிப்பிட்டார். இந்த மாநாட்டில் மத்திய அமைச்சர் அழகிரி பங்கேற்கவில்லை.