Home Featured உலகம் பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரப்படி மரண எண்ணிக்கை 128!

பாரிஸ் தாக்குதல்: இறுதி நிலவரப்படி மரண எண்ணிக்கை 128!

841
0
SHARE
Ad

At least 120 people believed dead in wave of Paris terrorist attaபாரிஸ் – இன்று பிரான்ஸ் தலைநகர் பாரிசில் பல இடங்களில் நடத்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதல்களிலும், துப்பாக்கித் தாக்குதல்களிலும் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 128 என பிரான்ஸ் அதிபர் அறிவித்துள்ளார்.

இதற்கு முன்னதாக வெளிவந்த தகவல்கள் மரணமடைந்தவர்களின் எண்ணிக்கை 153 எனத் தெரிவித்தன.

ஆகக் கடைசியான நிலவரங்களின்படி, காற்பந்து மைதானத்தில் நிகழ்த்தப்பட்ட தற்கொலை வெடிகுண்டுத் தாக்குதலில் 3 பேர் பலியானதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

கொன்சர்ட் ஹால் எனப்படும் அரங்கில் நிகழ்த்தப்பட்ட தாக்குதலில் 80க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்துள்ளனர்,

உணவகம் ஒன்றில் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கித் தாக்குல் காரணமாக மேலும் சிலர் மரணமடைந்துள்ளனர்.