Home Featured நாடு பிணை பிடிக்கப்பட்டிருந்த மலேசியரின் தலை வெட்டப்பட்டது – அபு சயாப் அட்டூழியம்!

பிணை பிடிக்கப்பட்டிருந்த மலேசியரின் தலை வெட்டப்பட்டது – அபு சயாப் அட்டூழியம்!

762
0
SHARE
Ad

kkmoceanking2கோத்தா கினபாலு – அபு சயாஃப் தீவிரவாத அமைப்பு பிணை பிடித்து வைத்திருந்த சரவாக்கைச் சேர்ந்த மலேசியர் பெர்னாட் தென்னின் தலையை வெட்டி கொடூரமாகக் கொலை செய்தது.

ஜோலோவிலுள்ள தீவு ஒன்றில் இரக்கமின்றி இந்த பாதகச் செயலை அந்த அமைப்பு செய்துள்ளது.

அபு சயாஃப் தீவிரவாத அமைப்பால் மலேசியர் ஒருவர் கொலை செய்யப்படுவது இதுவே முதல் முறை. ஜோலோ தீவில் உள்ள இண்டானான் கிராமத்தில் புடாரான் மலைப் பகுதியில் இன்று மாலை 4 மணியளவில் 39 வயதான பெர்னாட் தென் கொலை செய்யப்பட்டதாக இராணுவம் மற்றும் பிலிப்பைன்சில் உள்ள சமூகப் பணியாளர்கள் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

மேலும், பெர்னாட்டின் தலையை வெட்டித் துண்டாக்கும் காணொளியை தீவிரவாதிகள் விரைவில் வெளியிடவுள்ளதாகவும் ஜோலோவைச் சேர்ந்த சமூகப் பணியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

சபா காவல்துறை ஆணையர் டத்தோ ஜலாலுடின் அப்துல் ரஹ்மான் கூறுகையில், பெர்னாட் தென் குறித்து தங்களுக்கு எந்த ஒரு தகவலும் வரவில்லை என்று தெரிவித்துள்ளார்.

கடந்த மே 15-ம் தேதி சண்டாக்கானில் உள்ள ஓசன் கிங் என்ற கடல் உணவகத்தில் வைத்து பெர்னாட்டையும், தியென் நியூக் பன் (வயது 50) என்ற அந்த உணவக நிர்வாகியையும் தீவிரவாதிகள் கடத்திச் சென்றனர். இந்நிலையில், கடந்த நவம்பர் 8-ம் தேதி, தியென் விடுதலை செய்யப்பட்டு, சண்டக்கான் திரும்பினார்.