Home Slider முஸ்லிம்கள் குறித்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் சர்ச்சை கருத்து – வலுக்கும் கண்டனங்கள்!

முஸ்லிம்கள் குறித்து அமெரிக்க அதிபர் வேட்பாளர் சர்ச்சை கருத்து – வலுக்கும் கண்டனங்கள்!

795
0
SHARE
Ad

trump-gop-759நியூ யார்க் – “அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் நுழைவதற்கு தடை விதியுங்கள்” என்று அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப் பகிரங்கமாக அறிவித்துள்ளது அங்கு பெரும் சர்ச்சையை கிளப்பி உள்ளது.

அமெரிக்காவின் சான் பெர்னார்டினோ நகரில் கடந்த 2-ம் தேதி துப்பாக்கி சூடு தாக்குதல் நடத்தப்பட்டது. இதில் 14 அப்பாவி மக்கள் பரிதாபமாக உயிரிழந்தனர். 21 பேர் படுகாயம் அடைந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தான் தீவிரவாத அமைப்புகளுடன் தொடர்புடைய இஸ்லாமிய தம்பதியர் காரணம் என கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் பின்னர் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்டனர்.

இந்நிலையில், அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசுக் கட்சி சார்பில் போட்டியிட உள்ள டோனால்ட் ட்ரம்ப், “அமெரிக்காவிற்குள் முஸ்லிம்கள் வருவதற்கு முழுவதுமாக தடை விதிக்கப்பட வேண்டும். நமது நாட்டு பிரநிதிகள் என்ன நடக்கிறது என்பதை கண்டுபிடிக்கும் வரையில், தடையானது நீடிக்கப்பட வேண்டும்” என்று பிரச்சாரம் ஒன்றில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice

இதற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் கண்டனங்கள் குவிந்த வண்ணம் உள்ளன. இது தொடர்பாக வெள்ளை மாளிகை வெளியிட்டுள்ள அறிக்கையில், “டோனால்ட் ட்ரம்ப்பின் கருத்து, அமெரிக்காவின் மதிப்பு மற்றும் தேசிய பாதுகாப்பு நலனுக்கு எதிரானது” என்று குறிப்பிட்டுள்ளது.

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட உள்ள, ஜெப் புஷ், ஹிலாரி கிளிண்டன் போன்றவர்களும் டோனால்ட்டின் கருத்திற்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளனர்.