Home Featured கலையுலகம் “என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” – சிம்பு ஆவேசம்!

“என்னை யாரும் கேள்வி கேட்க முடியாது” – சிம்பு ஆவேசம்!

1055
0
SHARE
Ad

anirudh-simbuசென்னை – ‘பீப் சாங்’ என்ற பெயரில் வெளியாகி இருக்கும் பாடல் சிம்பு-அனிரூத் இருவரும் சேர்ந்து உருவாக்கியது தான் என்பது உறுதியாகி உள்ள நிலையில், பலரும் சிம்பு-அனிரூத் குறித்து கடுமையான விமர்சனங்களை முன்வைத்து வருகின்றனர். இந்நிலையில் அந்த பாடல் குறித்து நடிகர் சிம்புவின் விளக்கம், பிரபல செய்தி நிறுவனம் ஒன்றில் வெளியாகி உள்ளது.

அதில் அவர், தான் ‘பீப் பாடலை’ அதிகாரபூர்வமாக வெளியிடவில்லை என்றும், ஓய்வு நேரங்களில் தானும், அனிரூத்தும் பல்வேறு பாடல்களை உருவாக்கி இருப்பதாகவும், தற்போது வெளியாகி இருக்கும் பாடலை யாரோ ஒருவர் தனது திறன்பேசியில் இருந்த திருடி வாட்சாப்பில் வெளியிட்டு இருப்பதாகவும் கூறியுள்ளார்.

simbhuமேலும் அவர் தன் மீதான விமர்சனங்கள் குறித்து கூறுகையில், “இணையத்தில் வெளியாகி இருக்கு அந்த பாடலை ஒரு சிலர் நன்றாக இருக்கிறது என்றும், பலர் அதற்கு எதிராகவும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். அதே இணையத்தில் தானே போர்ன் (ஆபாச) காணொளிகளும் இருக்கிறது. அதை தேவை என்றால் தானே போய் பார்க்கிறீர்கள். அதேபோல் தான், பாடல் பிடிக்கவில்லை என்றால் கேட்காதீர்கள்.”

#TamilSchoolmychoice

“நான் எனது வீட்டின் படுக்கையறையிலும், குளியல் அறையிலும் என்ன வேண்டுமானாலும் செய்வேன். அதை எட்டிப் பார்க்கும் அதிகாரம் யாருக்கும் கிடையாது. என்னைக் கேள்விக் கேட்பவர்கள் வீடுகளில் நான் கேமராவை வைத்து அவர்கள் பண்ணும் விஷயங்களைப் பார்த்து ‘நீங்கள் ஏன் இப்படி எல்லாம் பண்ணுகிறீர்கள்’ என்று கேட்டால் என்னவாகும் என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்” என்றும் கேள்வி எழுப்பி உள்ளார்.

woman protest 600இதற்கிடையே, சிம்பு-அனிரூத் குறித்து கோவை மாதர் சங்கத்தினர் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளது குறிப்பிடத்தக்கது.