Home Featured தமிழ் நாடு முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் – வலுக்கும் எதிர்ப்புகள்!

முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் – வலுக்கும் எதிர்ப்புகள்!

625
0
SHARE
Ad

jayalalithaaசென்னை – சென்னையில் ஏற்பட்ட வெள்ள பாதிப்புகளுக்கு முதல்வர் ஜெயலலிதா மற்றும் சில மூத்த அதிகாரிகளின் அலட்சியமே காரணம் என்று கூறப்பட்டு வருகிறது. இது தொடர்பான புள்ளிவிவர அறிக்கையை பாமக இளைஞர் அணித் தலைவர் அன்புமணி பகிரங்கமாக அறிவித்துள்ள நிலையில், பல்வேறு ஊடகங்களும் இவ்வளவு பெரிய வெள்ள பாதிப்பு ஏற்பட்டதற்கான காரணங்களை வெளியிட்டு வருகின்றன.

திமுக சார்பில் ஏற்கனவே இது தொடர்பாக விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும் என்று கூறிவரும் நிலையில், தமிழக காங்கிரஸ் தலைவர் உள்ளிட்ட பல்வேறு தலைவர்களும் வெள்ள பாதிப்புகளுக்கு பொறுப்பேற்று முதல்வர் ஜெயலலிதா பதவி விலக வேண்டும் என்ற கூறி வருகின்றனர்.

Flood Alertஎனினும், ஊடகங்களில் வெளியாகி இருக்கும் அறிக்கைகளுக்கு இதுவரை தமிழக அரசு சார்பிலோ, ஜெயலலிதா சார்பிலோ எவ்வித விளக்கங்களும் வெளியிடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.