பெங்களூர் – கர்நாடக மாநிலம் பெங்களூரில் உள்ள தனியார் பள்ளி ஒன்றில் நுழைந்த சிறுத்தை ஒன்று, அங்கிருந்த 3 பேரை தாக்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
பெங்களூரு விப்ஜியார் பள்ளி வளாகத்தில் சிறுத்தை ஒன்று நடமாடுவதைப் பார்த்த காவலாளி அதிர்ச்சி அடைந்துள்ளார். அது குறித்து உடனடியாகப் பள்ளி நிர்வாகத்திற்குத் தகவல் அளித்துள்ளார்.
அதனைத் தொடர்ந்து, நிர்வாகத்தினர் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்த போது, அதிகாலை நேரத்தில் சிறுத்தை ஒன்று பள்ளி வளாகத்திற்குள் நுழைந்தது அதில் பதிவாகியிருந்தது.
அதைத் தொடர்ந்து, காவல்துறைக்கும், வனத்துறை அதிகாரிகளுக்கும் தகவல் தெரிவிக்கப்பட்டது.
பின்னர் அங்கு விரைந்து வந்த அதிகாரிகள், பள்ளிக்குள் புகுந்த சிறுத்தையை பிடிக்க நடவடிக்கை மேற்கொண்டனர். பட்டாசுகளை வெடித்து பதுங்கி இருந்த சிறுத்தையை வெளியே வர வழைத்துள்ளனர்.
அப்போது, பாய்ந்த வந்த சிறுத்தை பத்திரிக்கையாளர்களும், புகைப்படக் கலைஞர்களும் இருந்த பகுதி வந்து, அங்கிருந்த 3 பேரை விரட்டி விரட்டி தாக்கியது.
இதில் 2 பேரை கடித்துக் குதறியது. எனினும், அவர்கள் அதனுடன் போராடி தப்பிப் பிழைத்தனர்.
பின்னர், 14 மணி நேரப் போராட்டத்திற்குப் பிறகு துப்பாக்கி மூலம் மயக்க மருந்து ஊசி செலுத்தப்பட்டு சிறுத்தை பிடிக்கப்பட்டது.
காணொளி இங்கே:
https://www.youtube.com/watch?v=b_ji5MyaLeE