Home Featured நாடு பொந்தியானில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – ஆழமான பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது!

பொந்தியானில் கரை ஒதுங்கிய திமிங்கலம் – ஆழமான பகுதிக்கு திருப்பிவிடப்பட்டது!

706
0
SHARE
Ad

whaleபொந்தியான் – பந்தாய் ரம்பா கடற்கரை  அருகே 20 மீட்டர் நீளமுள்ள திமிங்கலம் ஒன்று நேற்று கரை ஒதுங்கியது. இதனால் அப்பகுதி மக்கள் ஆச்சர்யமும் அதிர்ச்சியும் அடைந்தனர்.

உள்ளூர் மீனவர் அரிஸ் கரிம் (வயது 54) என்பவர் வழக்கமாக மீன் பிடிப்பதற்காக கடலுக்குள் சென்று விட்டு காலை 6 மணியளவில் கரைக்குத் திரும்பிய போது பெரிய மீன் ஒன்று கரை அருகே நீந்திக் கொண்டிருப்பதைக் கண்டுள்ளார்.

அருகே சென்று பார்த்த போது தான் அது திமிங்கலம் என்பதை அறிந்துள்ளார். தனது வாழ்நாள் முழுவதும் மீனவராகவே இருந்து வரும் அரிஸ், ஜோகூர் கடலில் இவ்வளவு பெரிய திமிங்கலத்தைப் பார்த்ததே இல்லை என்று ஆச்சர்யப்படுகின்றார்.

#TamilSchoolmychoice

இதனிடையே, திமிங்கலம் கரை ஒதுங்கியது குறித்து பொந்தியான் தீயணைப்பு மற்றும் மீட்புக் குழுவினருக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது.

உடனடியாக அங்கு வந்த மீட்புக் குழுவினர், பொதுமக்களுடன் இணைந்து அதை மீன் பிடிப்படகின் மூலமாக கட்டி இழுத்துச் சென்று மீண்டும் கடலின் ஆழமான பகுதியில் விட்டுள்ளனர்.

பொந்தியான் மீட்பு மற்றும் தீயணைப்பு நிலையத்தின் சிறப்பு சேவைப் பிரிவு இயக்குநர் ஜூமாத் சைலான் கூறுகையில், “கரையில் ஆழமில்லாத பகுதியில் அத்திமிங்கலம் சிக்கிக் கொண்டதால், அது உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்தது. நாங்கள் மீன் பிடிப்படகின் மூலமாக அதன் வாலில் கயிறு கட்டி இழுத்துச் சென்று வெற்றிகரமாக மதியம் 3.30 மணியளவில் ஆழமான கடல் பகுதியில் விட்டுவிட்டோம். அந்த விலங்கு ஆழமான கடற்பகுதிக்கு நீந்திச் சென்றுவிட்டது.” என்று தெரிவித்துள்ளார்.