Home Featured இந்தியா சியாச்சின் பனிச்சரிவு: 10 இராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் உள்ளார்!

சியாச்சின் பனிச்சரிவு: 10 இராணுவ வீரர்களில் ஒருவர் உயிருடன் உள்ளார்!

856
0
SHARE
Ad

avalanche1 (1)ஜம்மு – கடந்த வாரம் புதன்கிழமை, காஷ்மீர் சியாச்சின் பனிச் சிகரத்தில் பனிப்புயல் காரணமாக ஏற்பட்ட பனிச் சரிவில் சிக்கி, புதைந்து போன 10 இராணுவ வீரர்களில், ஒருவர் உயிருடன் இருப்பதாகத் தகவல்கள் வெளிவந்துள்ளன.

இது குறித்து இந்திய இராணுவத்தின் வடக்குப் பிரதேச கமாண்டர் ஜெனரல் டி.எஸ்.ஹூடா நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில், “சியாச்சினில் நடைபெற்று வரும் மீட்பு நடவடிக்கைகளில், பனிச்சரிவில் புதையுண்ட 10 பேரில் ஒருவர் உயிருடன் உள்ளது கண்டறியப்பட்டுள்ளது. மற்ற வீரர்கள் நம்முடன் இல்லை என்பதை எண்ணி வருந்துகின்றோம்” என்று தெரிவித்துள்ளார்.

இன்று செவ்வாய்கிழமை காலை, லான்ஸ் நாயிக் ஹனமந்தப்பா என்ற அந்த இராணுவ வீரரை மீட்கும் பணியில் அதிதீவிரமாக இராணுவம் களமிறங்கியுள்ளது.

#TamilSchoolmychoice

அவர் உயிருக்கு ஆபத்தான நிலையில் உள்ளதாகவும் இராணுவம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த வாரம், இராணுவம் வெளியிட்ட அறிக்கையில், பனிச்சரிவில் புதையுண்ட 10 இராணுவ வீரர்களும் உயிரிழந்துவிட்டதாக அறிவித்தது குறிப்பிடத்தக்கது.