Home Featured நாடு கேஎல்சிசி-யில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன!

கேஎல்சிசி-யில் இரண்டு நாட்டு வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டன!

1351
0
SHARE
Ad

Bombகோலாலம்பூர் – கோலாலம்பூரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கேஎல்சிசி-யில் இன்று மாலை இரண்டு நாட்டு வெடிகுண்டுகளை காவல்துறையினர் கைப்பற்றியுள்ளனர்.

மாலை 7.45 மணியளவில் தானியங்கி இயந்திரம் மூலமாக அந்த வெடிகுண்டுகள் செயலிழக்கச் செய்யப்பட்டதாக ஹங் துவா தீயணைப்பு மற்றும் மீட்புப் பிரிவின் செயல்பாடுகளுக்கான கமாண்டர் பாவுட் ஓமார் தெரிவித்துள்ளார்.

இரண்டு கண்ணாடி ஜாடிகள் கொண்டு தயாரிக்கப்பட்டிருந்த அந்த வெடிகுண்டுகளை கேஎல்சிசி பணியாளர்கள் சிலர் பார்த்துவிட்டு, மாலை 5.30 மணியளவில் காவல்துறைக்குத் தகவல் தெரிவித்துள்ளனர்.

#TamilSchoolmychoice

அதனைத் தொடர்ந்து உடனடியாக அங்கு வெடிகுண்டு நிபுணர்களை அனுப்பி வைத்த காவல்துறை அதை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்துள்ளது.