Home Featured இந்தியா நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா – மத்திய அரசு தகவல்!

நாட்டை விட்டு தப்பினார் விஜய் மல்லையா – மத்திய அரசு தகவல்!

477
0
SHARE
Ad

vijaபுதுடெல்லி – விஜய் மல்லையா இந்தியாவில்  இல்லை என்றும்,  கடந்த மார்ச் 2-ஆம் தேதியன்றே நாட்டை விட்டு வெளியேறி விட்டதாகவும் மத்திய அரசு,  உச்ச நீதிமன்றத்திடம் தெரிவித்துள்ளது.

நாட்டை விட்டு தப்பியுள்ள விஜய் மல்லையா,  ரூ. 7 ஆயிரம் கோடிக்கு மேல், இந்தியாவின் 17 க்கும் மேற்பட்ட பொதுத்துறை வங்கிகளுக்கு கடன் பாக்கி வைத்துள்ளார்.

கடன் வழங்கிய வங்கிகள் இணைந்து,  உச்ச நீதிமன்றத்தில் மனு ஒன்றைத் தாக்கல் செய்திருந்தன. அதில், விஜய் மல்லையாவின் பாஸ்போர்ட்டை பறிக்க வேண்டுமென்று கூறப்பட்டிருந்தது.

#TamilSchoolmychoice

இந்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது. வழக்கு விசாரணையின் போது,  மத்திய அரசின் வழக்கறிஞர் முகுல் ரோகத்கி, விஜய் மல்லையா கடந்த மார்ச் 2-ஆம் தேதியே இந்தியாவை விட்டு வெளியேறி விட்டதாக சி.பி.ஐ.  தன்னிடம் தெரிவித்துள்ளதாக கூறினார்.

இதையடுத்து உச்ச நீதிமன்றம், இதற்கு விஜய் மல்லையா  2 வார காலத்திற்குள் பதில் அளிக்க வேண்டும் என்றும்,  அவரது பாஸ்போர்ட் பறிமுதல் செய்யப்படாது என்றும் தெரிவித்துள்ளது.

விஜய் மல்லலையாவின் இமெயில் விலாசத்திற்கும் மனு அனுப்பப்பட்டுள்ளது. இந்த மனுவை லண்டனில் உள்ள இந்திய தூதரகம் அனுப்பியுள்ளது. அடுத்த விசாரணையின்போதாவது விஜய் மல்லையா  நேரில் ஆஜராக வேண்டும் என்று வங்கிகள் சார்பில்  கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே யுனைடெட் ஸ்பிரிட்ஸ் நிறுவனத்தின் தலைவர் இருந்து விஜய் மல்லையா விலகியதற்காக,  டியாஜியோ நிறுவனம் வழங்கிய ரூ.  515 கோடியை பெறவும் இந்திய கடன் வசூலிப்பு முகமை விஜய் மல்லையாவுக்குத்  தடை விதித்துள்ளது.