Home வணிகம்/தொழில் நுட்பம் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு

விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த இலண்டன் நீதிமன்றம் உத்தரவு

2155
0
SHARE
Ad

இலண்டன் – வங்கிகளிடம் இருந்து பெற்றக் கடன்களைச் செலுத்தாமல், இந்தியாவிலிருந்து வெளியேறி இலண்டனில் அடைக்கலம் புகுந்த கோடீஸ்வர வணிகர் விஜய் மல்லையாவை இந்தியாவுக்கு நாடு கடத்த வேண்டும் என இந்தியாவின் மத்திய புலனாய்வுத் துறை (சிபிஐ) செய்திருந்த விண்ணப்பத்தை ஏற்றுக் கொண்ட இலண்டன் நீதிமன்றம் அவரை மீண்டும் இந்தியாவுக்கு நாடுகடத்த இன்று உத்தரவிட்டது.

இந்த நீதிமன்றத் தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய விஜய் மல்லையாவுக்கு சட்ட ரீதியாக 14 நாட்கள் கால அவகாசம் இருக்கிறது.

இந்தத் தீர்ப்பு, மோடி அரசாங்கத்திற்கும், சிபிஐ எனப்படும் மத்தியப் புலனாய்வுத் துறைக்கும் பெரும் வெற்றியாகக் கருதப்படுகிறது.

#TamilSchoolmychoice

காங்கிரஸ் ஆட்சியில் பலன் பெற்று நாட்டை விட்டு ஓடிய விஜய் மல்லையாவை பாஜக ஆட்சியில் மீண்டும் இந்தியாவுக்குத் திரும்பக் கொண்டு வருகிறோம் என இந்தத் தீர்ப்பு குறித்து நிதியமைச்சர் அருண் ஜெட்லி தனது டுவிட்டர் பக்கத்தில் கருத்துரைத்தார்.