Home Featured நாடு கேஎல்சிசி-யில் இருந்தது வெடிகுண்டு அல்ல – காலிட் தகவல்!

கேஎல்சிசி-யில் இருந்தது வெடிகுண்டு அல்ல – காலிட் தகவல்!

817
0
SHARE
Ad

Bombகோலாலம்பூர் – நேற்று கோலாலம்பூரின் மிக முக்கிய சுற்றுலாத் தளங்களில் ஒன்றான கேஎல்சிசி-யில், இரண்டு கண்ணாடி ஜாடிகளில் இருந்து வெடிக்கக் கூடிய மர்ம பொருட்களை கைப்பற்றிய காவல்துறை, வெடிகுண்டு நிபுணர்கள் மூலம் அதை வெற்றிகரமாக செயலிழக்கச் செய்யப்பட்டதாகத் தகவல்கள் வெளிவந்தன.

இந்நிலையில், முதற்கட்ட விசாரணையில், அந்த கண்ணாடி ஜாடிகளில் இருந்தது வெடிகுண்டு இல்லை என்றும், கேஎல்சிசி-யில் உள்ள பெட்ரோசயின்சை சுற்றிப் பார்க்க வந்த பள்ளிக் குழந்தைகளுக்கு, பரிசாகக் கொடுக்கப்பட்ட கண்ணாடி ஜார்கள் என்றும் தேசிய காவல்படைத் தலைவர் டான்ஸ்ரீ காலிட் அபு பக்கர் நேற்று இரவு தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice