Home நாடு கே.எல்.சி.சியின் 3-வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

கே.எல்.சி.சியின் 3-வது மாடியிலிருந்து விழுந்தவர் பலி!

680
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சூரியா கே.எல்.சி.சியின் மூன்றாவது மாடியில் இருந்து ஒருவர் இன்று தற்கொலை செய்துக் கொண்டார்.

மதியம் 1.52 மணிக்கு பேரங்காடியில் நடந்த சம்பவம் குறித்து காவல் துறையினருக்கு அழைப்பு வந்ததாக டாங் வாங்கி காவல் துறை தலைவர் முகமட் சைனால் அப்துல்லா தெரிவித்தார்.

“இந்த சம்பவத்தில் சூரியா கே.எல்.சி.சியின் மூன்றாம் மாடியில் இருந்து ஒருவர் விழுந்ததை என்னால் உறுதிப்படுத்த முடியும்,” என்று அவர் எப்எம்டியிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

“விசாரணைகள் இன்னும் நடந்து கொண்டிருக்கின்றன. மேலும் சரியான நேரத்தில் தகவல்கள் வழங்கப்படும்,” என்று அவர் கூறினார்.