Home நாடு 5 மாதம் சம்பளம் கொடுக்காததால் பாகிஸ்தான் தொழிலாளி தற்கொலை

5 மாதம் சம்பளம் கொடுக்காததால் பாகிஸ்தான் தொழிலாளி தற்கொலை

560
0
SHARE
Ad

கோலாலம்பூர்: பாகிஸ்தான் கட்டுமானத் தொழிலாளி ஏப்ரல் 17 அன்று ஜாலான் அம்பாங்கில் உள்ள கட்டுமான இடத்தில் இறந்துள்ளார்.

அவர் பணிபுரிந்த நிறுவனம் ஐந்து மாதங்களுக்கு சம்பளத்தை செலுத்தாததால், 30 வயதான அவர் வருத்தப்பட்டு பின்னர் தற்கொலை செய்து கொண்டார் என்று நம்பப்படுகிறது.

முன்னதாக, பாதிக்கப்பட்டவர் ஒரு காணொலியை டிக் டோக்கில் வெளியிட்டிருந்தார். தனது முதலாளி தனது சம்பளத்தை செலுத்தாததால் தற்கொலை செய்து கொள்வதாகக் கூறியிருந்தார்.

#TamilSchoolmychoice

“நான் ஒரு காணொலி வெளியிடுகிறேன். எனது முதலாளி ஐந்து மாதங்களாக என் சம்பளத்தை கொடுக்கவில்லை. என்னால் அதைத் தாங்க முடியாது. நான் இறந்துவிடுகிறேன். இதற்கு என் முதலாளிதான் காரணம். அவரைக் கண்டுபிடியுங்கள், “அவர் அக்காணொலியில் அவர் கூறினார்.

பாதிக்கப்பட்டவர் தனது முதலாளியைப் பற்றிய விவரங்களைக் கொண்ட மற்றொரு காணொலியையும் குறிப்பிட்டுள்ளார். இது சமூக ஊடகங்களில் பரவி வருகிறது.

விசாரணையின் அடிப்படையில், நிதி சிக்கல்களால் பாதிக்கப்பட்டவருக்கு 2020 டிசம்பர் முதல் 2021 ஏப்ரல் வரை நிறுவனம் சம்பளம் வழங்கவில்லை என்று வாங்ஸா மஜு காவல் துறை தலைவர் ஆஷாரி அபு சமா தெரிவித்தார்.

பலியானவர் ஷாஜாத் அகமட் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.

“பி.கே.பி காரணமாக முதலாளிக்கு நிதிப் பிரச்சனைகள் இருப்பதாக விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது. முதலாளி கொஞ்சம் பணம் செலுத்த விரும்புகிறார், ஆனால் அவர் முழு சம்பளத்தையும் விரும்பியதால் அவர் அதனை ஏற்க விரும்பவில்லை.

“அவரது சக ஊழியர், அவருக்கு குடும்பப் பிரச்சனைகள் இருப்பதாகவும், குடும்பத்தினர் பணம் அனுப்பச் சொன்னதால் மனச்சோர்வடைந்ததாகவும் கூறினார்,” என்று அவர் கூறினார்.