Home நாடு கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் 2,617 சம்பவங்கள் பதிவு

கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் 2,617 சம்பவங்கள் பதிவு

506
0
SHARE
Ad

கோலாலம்பூர்: கல்வித் துறை சம்பந்தப்பட்ட 49 தொற்று குழுக்கள் மற்றும் 2,617 சம்பவங்கள் உள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.

இந்த ஆண்டு தொடக்கத்தில் இருந்து கண்டறியப்பட்ட 89 தொற்று குழுக்களில் 4,868 நோய்த்தொற்று சம்பவங்களில் இதுவும் உள்ளது என்று சுகாதார அமைச்சர் டாக்டர் அடாம் பாபா ஓர் அறிக்கையில் தெரிவித்தார்.

கல்வி அமைச்சின் கீழ் உள்ள பள்ளிகள் மற்றும் நிறுவனங்களுடன் 39 தொற்று குழுக்களும் 1,420 சம்பவங்களும் இணைக்கப்பட்டுள்ளதாகவும், 1,870 சம்பவங்கள் கொண்ட 19 தொற்று குழுக்கள் உயர் கல்வி நிறுவனங்களை உள்ளடக்கியதாகவும் அவர் கூறினார்.

#TamilSchoolmychoice

கொவிட் -19 பரவுவதைத் தடுக்க கல்வித்துறையின் கீழ் உள்ள அனைத்து தரப்பினருடனும் தனது அமைச்சகம் எப்போதும் கலந்தாலோசித்து வருவதாக அடாம் உறுதியளித்தார்.