Home One Line P1 தெங்கு அட்னான் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஏப்ரல் 22 விசாரிக்கப்படும்

தெங்கு அட்னான் மேல்முறையீட்டு விண்ணப்பம் ஏப்ரல் 22 விசாரிக்கப்படும்

812
0
SHARE
Ad

கோலாலம்பூர்: ஒரு தொழிலதிபரிடமிருந்து 2 மில்லியன் ரிங்கிட் இலஞ்சம் வாங்கியதற்காக விதிக்கப்பட்ட தண்டனைக்கு எதிராக முன்னாள் கூட்டரசு பிரதேச அமைச்சர் தெங்கு அட்னான் தெங்கு மன்சோரின் மேல்முறையீட்டை நாளை வியாழக்கிழமை (ஏப்ரல் 22) மேன்முறையீட்டு நீதிமன்றம் விசாரிக்கும்.

மேல்முறையீட்டை விசாரிக்க ஏப்ரல் 22 மற்றும் ஏப்ரல் 26 ஆகிய தேதிகளையும் நீதிமன்றம் நிர்ணயித்தது.

70 வயதான தெங்கு அட்னான் தனது குற்றச்சாட்டு மற்றும் தண்டனைக்கு எதிராக டிசம்பர் 21-ஆம் தேதி மேல்முறையீட்டு மனுவை தாக்கல் செய்தார். அதே நாளில் உயர்நீதிமன்ற நீதிபதி 12 மாத சிறைத்தண்டனையும், குற்றச்சாட்டுகளில் குற்றவாளி எனக் கண்டறிந்த பின்னர் அவருக்கு 2 மில்லியன் ரிங்கிட் அபராதமும் விதித்தார்.

#TamilSchoolmychoice

இருப்பினும், சிறைத் தண்டனையை நிறைவேற்றுவதை நிறுத்தி வைக்கவும், மேல்முறையீடு செய்யப்படும் வரை அபராதம் செலுத்துவதை ஒத்திவைக்கவும் அவர் விண்ணப்பித்ததை நீதிமன்றம் அனுமதித்தது.