Home இந்தியா கொவிட்-19: இந்தியாவில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

கொவிட்-19: இந்தியாவில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது

884
0
SHARE
Ad

சென்னை: இந்தியாவில் அதிகரித்து வரும் கொவிட்-19 தொற்று நோயினால், பல்வேறு மாநிலங்களில் பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது.

தமிழ்நாட்டில் நேற்று மட்டும் புதிதாக 10,986 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. தற்போது அங்கு 79,804 பேர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.

இவர்களில் சுவாசப் பாதிப்புகள் இருப்பவர்கள் மருத்துவமனைகளின் அவசர சிகிச்சை பிரிவுகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். பிராணவாயு தட்டுப்பாடு ஏற்பட்டுள்ள நிலையில், பலர் உயிரிழப்பதாக அவ்வப்போது செய்திகள் வெளியாகி உள்ளன.

#TamilSchoolmychoice

இதற்காக ‘ஆக்சிஜன் எக்ஸ்பிரஸ்’ என்ற சிறப்பு இரயில்களை இந்திய ரயில்வே ஏற்பாடு செய்துள்ளது.

ஆயினும், தமிழகத்திற்கு அனுப்ப இருந்த பிராணவாயு வசதிகள் ஆந்திரா தெலுங்கானா மாநிலங்களுக்கு திருப்பி விடப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

மாநில அரசை கலந்து ஆலோசிக்காமல் மத்திய அரசு இப்படியொரு முடிவை எடுத்துள்ளதாக, தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் கூறியுள்ளார்.