Home One Line P1 இயோ பீ யினை பதவி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை!

இயோ பீ யினை பதவி நீக்கம் செய்யும் திட்டம் இல்லை!

626
0
SHARE
Ad

கோலாலம்பூர்: டாக்டர் மகாதிர் முகமட் பிரதமராக இருந்த காலத்தில் இயோ பீ யினை எரிசக்தி, அறிவியல், தொழில்நுட்பம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை அமைச்சராக பதவி நீக்கம் செய்வதற்கான திட்டம் ஒருபோதும் விவாதிக்கப்படவில்லை என்று அமானா துணைத் தலைவர் சலாவுடின் அயோப் தெரிவித்தார்.

அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும், இதே பிரச்சனை ஒருபோதும் நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் விவாதிக்கப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

“அமைச்சரவையில் விவாதிக்கப்படவில்லை. நம்பிக்கை கூட்டணி தலைவர்கள் மன்றக் கூட்டத்தில் கூட இது ஒருபோதும் முறையாக விவாதிக்கப்படவில்லை,” என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார்.

#TamilSchoolmychoice

முன்னாள் ஜசெக துணை அமைச்சர் லீவ் சின் டோங் எழுதிய “லிம் கிட் சியாங்: பெட்ரியோட், லீடர், பைட்டர்” என்ற புத்தகத்தில் உள்ள குற்றச்சாட்டு குறித்து கருத்து கேட்கப்பட்டபோது சலாவுடின் இதனைக் கூறினார்.

முன்னதாக, ஆகஸ்ட் 21 புதன்கிழமை நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் இயோவை மாற்றுவதன் மூலம் அமைச்சரவை மறுசீரமைப்பை செய்ய மகாதீர் திட்டமிட்டதாக லீ அப்புத்தகத்தில் எழுதியிருந்தார்.

லைனாஸ் பிரச்சனை மற்றும் பிற சுற்றுச்சூழல் பிரச்சனைகள் குறித்து இயோ உறுதியாக இருந்ததால், அவருக்கு பதிலாக வேறு ஒருவரை நியமிக்க மகாதீர் விரும்புவதாக அந்த புத்தகம் கூறுகிறது.