Home One Line P2 ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் பதிவாகி உள்ளன

ஜப்பானில் அதிகமான தற்கொலைகள் பதிவாகி உள்ளன

608
0
SHARE
Ad

தோக்கியோ: உலகில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு தற்கொலைகளை ஜப்பானில் வேகமாக நிகழ்கிறது.

பெரும்பாலான நாடுகளைப் போலல்லாமல், இங்கே அவை ஒவ்வொரு மாதத்தின் முடிவிலும் அதிகமாக ஏற்பட்டுள்ளதாக தெரிவிதிக்கப்பட்டுள்ளது. கொவிட்-19 தொற்றுநோய் தாக்கத்தின் போது இந்த எண்கள் மேலும் உயருவதைக் காண முடிந்ததாக தற்கொலை தடுப்பு வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.

2020- ஆம் ஆண்டில், 11 ஆண்டுகளில் முதல் முறையாக, ஜப்பானில் தற்கொலை விகிதம் அதிகரித்தது. மிகவும் ஆச்சரியம் என்னவென்றால், ஆண் தற்கொலைகள் சற்று வீழ்ச்சியடைந்தாலும், பெண்கள் மத்தியில் விகிதங்கள் கிட்டத்தட்ட 15 விழுக்காடு உயர்ந்தன.

#TamilSchoolmychoice

முந்தைய ஆண்டின் இதே மாதத்துடன் ஒப்பிடும்போது, அக்டோபர் மாதத்தில், ஜப்பானில் பெண் தற்கொலை விகிதம் 70 விழுக்காட்டுக்கும் அதிகமாக உயர்ந்தது.

2008- ஆம் ஆண்டின் வங்கி நெருக்கடி அல்லது 1990- களின் முற்பகுதியில் ஜப்பானின் பங்குச் சந்தை நெருக்கடியின் முந்தைய காலங்களை பார்த்தால், இதன் தாக்கம் பெரும்பாலும் நடுத்தர வயது ஆண்களால் உணரப்பட்டது. ஆண் தற்கொலை விகிதங்களில் பெரிய உயர்வு காணப்பட்டது.

ஆனால், கொவிட்-19 இளைஞர்களை, குறிப்பாக, இளம் பெண்களை பாதித்துள்ளது.