இந்த வழக்கில் காவல் துறையினரின் விசாரணையை எளிதாக்குவதற்கு, தனது முழு ஒத்துழைப்பை வழங்குவதாக தனது வாடிக்கையாளர் உறுதியளித்ததை அடுத்து, நீதிபதி நோராஷிகின் சாஹாட் விண்ணப்பத்தை தள்ளுபடி செய்ததாக வழக்கறிஞர் பூங் செங் லியோங் தெரிவித்தார்.
சிலாங்கூர் குற்றப் புலனாய்வுத் துறைத் தலைவர் பாட்ஸில் அகமட், பினாங்கு குளுகோரைச் சேர்ந்த நபர் நேற்று மாலை 4.30 மணியளவில் கோலாலம்பூரில் கைது செய்யப்பட்டதாகத் தெரிவித்தார்.
துணை தேடும் இணையதளத்தில், 10 பொது மற்றும் தனியார் பல்கலைக்கழகங்களைச் சேர்ந்த மாணவர்களைக் கொண்டிருப்பதாகவும், அவர்களின் வாழ்க்கைக்கு நிதியளிக்க இதனை நாடியதை அடுத்து இந்த விசாரணைத் தொடங்கப்பட்டது என்று அவர் கூறினார்.