Home One Line P1 பிப்ரவரி 21: கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டிற்கு வருவதை நேரடி ஒளிபரப்பில் காணலாம்

பிப்ரவரி 21: கொவிட்-19 தடுப்பூசிகள் நாட்டிற்கு வருவதை நேரடி ஒளிபரப்பில் காணலாம்

554
0
SHARE
Ad

கோலாலம்பூர்: வருகிற பிப்ரவரி 21-ஆம் தேதி கொவிட்-19 தடுப்பூசி நாட்டிற்கு வருவதை சுகாதார அமைச்சு நேரடி ஒளிபரப்பின் மூலமாக முகநூலில் ஒளிபரப்பும் என்று சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.

வரும் ஞாயிறு அன்று தடுப்பூசிகள் கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தை வந்தடையும் என்று அண்மையில் அறிவிக்கப்பட்டது. இந்த நேரடி ஒளிபரப்பு காலை 9 மணிக்கு தொடங்கும்.

“சுகாதார அமைச்சு பிபைசர் கொவிட்-19 தடுப்பூசிகள் வருகிற ஞாயிறு (பிப்ரவரி 21), கேஎல்ஐஏவில் வந்தடைவதை நேரடியாக ஒளிபரப்பும். காலை 9 மணிக்கு முகநூலில் நேரலையைக் காணலாம்,” என்று அது தமது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ள்து.

#TamilSchoolmychoice