Home One Line P1 நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

நீதிமன்ற உத்தரவுக்குப் பிறகு ரோஸ்மா கண்ணீர் வடித்தார்!

692
0
SHARE
Ad

கோலாலம்பூர்: சரவாக்கில் உள்ள 369 கிராமப்புற பள்ளிகளுக்கு 1.25 பில்லியன் ரிங்கிட் சூரிய திட்டத்தை நிறுவ ஒரு நிறுவனத்திற்கு உதவுவதற்காக மூன்று ஊழல் குற்றச்சாட்டுக்களில் தன்னை தற்காத்து வாதம் புரியுமாறு நீதிபதி இன்று ரோஸ்மா மன்சோரை உத்தரவிட்டார்.

இந்த முடிவினை அடுத்து அவர் திகைத்துப் போனதாகவும் வழக்கரிஞர்கல் கூறினர்.

“நீதிமன்றம் அதன் தீர்ப்பிற்கு இன்று காரணங்களை தெரிவிக்காததால் அவர் திகைத்துப் போனார்,” என்று வழக்கறிஞர் அக்பெர்டின் அப்துல் காடிர் கூறினார்.

#TamilSchoolmychoice

ரோஸ்மாவின் வழக்கு ஓர் உயர்நிலை வழக்கு என்பதால் சில பரந்த காரணங்கள் வழங்கப்படும் என்று தனது வாடிக்கையாளர் எதிர்பார்த்ததாக அக்பெர்டின் கூறினார்.

ரோஸ்மா கண்ணீருடன் காணப்பட்டதாக மற்றொரு வழக்கறிஞர் தெரிவித்தார்.

விசாரணை நீதிபதி முகமட் சைய்னி மஸ்லான் தீர்ப்பளித்த உடனேயே, தமது ஆறுதலை வழங்க நீதிமன்ற அறையில் இருந்த நஜிப், அவரை கட்டிப்பிடித்து ஆறுதல்படுத்தினார்.

“நாங்கள் அவரிடம் திரும்பிச் சென்று எல்லா மன அழுத்தங்களிலிருந்தும் விடுபடச் சொன்னோம்,” என்று அக்பெர்டின் கூறினார்.