Home உலகம் ஜப்பானைத் தாக்கத் தயாராகிறது ‘ஷான்ஷான்’ புயல்!

ஜப்பானைத் தாக்கத் தயாராகிறது ‘ஷான்ஷான்’ புயல்!

140
0
SHARE
Ad

தோக்கியோ: இந்த ஆண்டின் மிகக் கடுமையான புயல் காற்றாகக் கருதப்படும் ‘ஷான்ஷான்’  என்ற பெயர் கொண்ட புயலை எதிர்கொள்ள ஜப்பான் தயாராகி வருகிறது.

இதுவரையில் 845,000 மக்கள் பாதிக்கப்படும் எனக் கருதப்படும் வட்டாரங்களில் இருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.

ஜப்பானின் தென் பகுதித் தீவான கியூஷூவை இந்தப் புயல் தாக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

#TamilSchoolmychoice

நாளை வியாழக்கிழமை (ஆகஸ்ட் 29) ‘ஷான்ஷான்’ ஜப்பானைக் கரைகடக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

மணிக்கு 257 கிலோ மீட்டர் வேகத்தில் புயல் காற்று வீசும் என கணிக்கப்படுகிறது. புயல் தாக்கக் கூடும் எனக் கருதப்படும் பகுதிகளில் தொழிற்சாலைகள் மூடப்பட்டுள்ளன. டோயோட்டா தனது 14 தொழிற்சாலைகளை தற்காலிகமாக மூடுவதற்கு உத்தரவிட்டது.

இதற்கிடையில் நிலச்சரிவின் காரணமாக 2 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டிருக்கிறது.