
தோக்கியோ : இன்று வியாழக்கிழமை (ஆகஸ்ட் 8) ஜப்பானின் தென்பகுதி கடலோரத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 7.1 புள்ளி என்ற அளவில் இந்த நிலநடுக்கம் பதிவாகியது.
சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, கடலோரத்தில் வசிப்பவர்கள் இல்லங்களில் இருந்து வெளியே வர வேண்டாம் எனக் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளார்கள்.
ஜப்பானின் தென் தீவான கியூஷூவில் கிழக்குக் கடற்கரையோரம் 30 கிலோ மீட்டர் ஆழத்தில் 7.1 புள்ளிகள் அளவில் இந்த நிலநடுக்கம் பதிவு செய்யப்படுள்ளது.