Home கலை உலகம் மலேசியாவில் அதிகம் பார்க்கப்பட்ட “பசங்க” உள்ளூர் தமிழ் தொடர் – சீசன் 2-இன் மூலம் ஆஸ்ட்ரோ...

மலேசியாவில் அதிகம் பார்க்கப்பட்ட “பசங்க” உள்ளூர் தமிழ் தொடர் – சீசன் 2-இன் மூலம் ஆஸ்ட்ரோ மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறது!

302
0
SHARE
Ad

*மலேசியாவில் அதிகம் பார்க்கப்பட்டப் ‘பசங்க’ உள்ளூர் தமிழ் தொடரை சீசன் 2-இன் மூலம் ஆஸ்ட்ரோ மீண்டும் திரைக்குக் கொண்டு வருகிறது.

*100 அத்தியாயங்கள் கொண்ட மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் தொடர் ஆகஸ்டு 12, இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக முதல் ஒளிபரப்புக் காணுகிறது

கோலாலம்பூர் – அதிகம் பார்க்கப்பட்ட ‘பசங்க’ உள்ளூர் தமிழ் தொடரின் இரண்டாவது சீசன், ஆகஸ்டு 12, இரவு 9 மணிக்கு, ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் முதல் ஒளிபரப்புக் காணவிருக்கிறது. இதனை அறிவிப்பதில் ஆஸ்ட்ரோ மகிழ்ச்சி அடைகிறது. விருது வென்ற இயக்குநர் ஷாலினி பாலசுந்தரம் இயக்கிய மற்றும் கணவன்-மனைவியான டேனேஸ் குமார் மற்றும் டி.எஸ். டாக்டர் விமலா பெருமாள் தயாரித்த ஆஸ்ட்ரோவின் ‘பசங்க’ சீசன் 2, 100 அத்தியாயங்களைக் கொண்ட மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் தொடராகும்.

#TamilSchoolmychoice

ஆஸ்ட்ரோவின் இந்திய வாடிக்கையாளர் வணிகப் பிரிவுத் துணைத் தலைவர், பிரேம் ஆனந்த் கூறுகையில், “பார்வையாளர்களை ஆழமாக இணைக்கும் நிகழ்ச்சியின் திறனுக்கு ஒரு சிறந்த சான்றாகப் பசங்க முதல் சீசனுக்குக் கிடைத்த அமோக வரவேற்பு அமைகிறது. மேலும், இந்தப் பிரபலமானத் தொடரின் மற்றொருச் சீசனைக் கொண்டு வருவதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். மலேசியச் சாயலில் நமது உள்ளூர் திறமைகளின் சிறப்பான நடிப்பால் அதன் ஈர்க்கும் குடும்ப நாடகக் கதைக்களம் மேம்படுத்தப்பட்டுள்ளது. இரண்டாவது சீசன் வாயிலாக மலேசிய ஒளிபரப்பு நிலப்பரப்பின் எல்லைகளைக் கடந்து 100 அத்தியாயங்களைக் கொண்ட மலேசியாவின் முதல் உள்ளூர் தமிழ் தொடரை உருவாக்குவதில் நாங்கள் பெருமிதம் கொள்கிறோம். உள்ளூர் கதைகள் மற்றும் திறமைகள் ஆகியவற்றில் முன்னிலை வகிப்பதன் மூலம், தேசத்தின் மிக அதிகம் பார்க்கப்பட்ட உள்ளூர் தமிழ் தொடராக மீண்டும் ஒரு வரலாறுப் படைப்பதை நாங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளோம். மலேசியர்களின் தனித்துவமானக் கலாச்சாரம் மற்றும் வாழ்க்கை முறையை உள்ளடக்கியச் சீசன் 2-இன் சுவாரசியமானக் குடும்ப நாடகத்தின் வசீகரிக்கும் திருப்பங்கள் எங்கள் வடிக்கையாளர்களை அவர்களின் இருக்கைகளிலேயே அமரச் செய்யும் என்று நாங்கள் நம்பிக்கைக் கொண்டுள்ளோம்” எனத் தெரிவித்தார்.

கடுமையான யதார்த்தத்திற்க்குத் தள்ளப்படும் ராஜா, ஜகா மற்றும் ஆனந்த் ஆகிய மூவரின் வாழ்க்கையை நகைச்சுவை-நாடகத் தொடரானப் பசங்க சீசன் 2 சித்திரிக்கிறது. ராஜாவின் பெற்றோர் தீங்கிழைக்கும் நபர், குமாரின் இலக்காகும் போது அவரின் வாழ்க்கை ஒரு மாபெரும் திருப்பத்தை எதிர்நோக்குகிறது. கடந்தக் கால நினைவுகளுடன் போராடும் தனதுச் சகோதரி, வித்யாவுடன் சேர்ந்து கோலாலம்பூரை விட்டு வெளியேறி தனதுச் சொந்த ஊருக்குத் திரும்ப வேண்டியக் கட்டாயத்தில் அவர் உள்ளார். தனதுச் சொந்த ஊருக்குத் திரும்பியதும், திருப்பதி, குமார் மற்றும் கதிர் ஆகியோரின் திட்டமிட்டச் சவால்களின் வலையில் ராஜா விழுகிறார். மறுபுறம், திரைப்பட இயக்குநரான ஜகா, ரேஷ்மாவின் மீது காதல் வயப்படும் அதே வேளையில் தனது திட்டங்களில் பணியாற்ற முயற்சிக்கிறார். இதற்கிடையில், முன்னாள் நண்பருடனான கீதாவின் நெருங்கிய பந்தம் ஆனந்த் மற்றும் கீதாவின் திருமண உறவில் பதற்றத்தைத் தூண்டுகிறது. உறவுகள் சோதிக்கப்படுகின்றன, நிதிச் சிக்கல்கள் பெருகுகின்றன, மேலும் கதாபாத்திரங்கள் தங்களுள் உள்ள துர்தேவதைகளை எதிர்கொள்கின்றன – இச்சுவாரசியமானக் கதைக்களம் நிச்சயமாக ரசிகர்களை ஈர்க்கும்.

டேனேஸ் குமார், மூன் நிலா, தாஷா கிருஷ்ணகுமார், அல்வின் மார்ட்டின் சத்தியாவு, சசிகுமார், நித்யஸ்ரீ, சுசீலா தேவி, தேவக்கன்னி, கபில் கணேசன், கேஷப் சூர்யா மற்றும் பலத் திறமைமிக்க மற்றும் புதுமுக உள்ளூர் கலைஞர்களின் விரிவான வரிசையைப் பாட்டி மூலிகை நிறுவனம் நிதி ரீதியாக ஆதரிக்கும் இந்தத் தொடர் கொண்டுள்ளது.

ஒவ்வொரு திங்கள் முதல் வியாழன் வரை முதல் ஒளிபரப்புக் காணும் பசங்க சீசன் 2 தொடரின் புதிய அத்தியாயங்களை இரவு 9 மணிக்கு ஆஸ்ட்ரோ விண்மீன் (அலைவரிசை 202) வாயிலாக டிவி, ஆஸ்ட்ரோ கோ, ஆன் டிமாண்ட் மற்றும் சூகா ஆகியவற்றில் கண்டு மகிழுங்கள். மேல் விபரங்களுக்கு content.astro.com.my எனும் அகப்பக்கத்தை வலம் வாருங்கள்.